லக்னோ: வட மாநிலங்களில், தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது. உ.பி., மாநிலத்தின், சில பகுதிகளில், நேற்று குறைந்த பட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசுக்கும், கீழே சென்றது. கடும் குளிர் காரணமாக, நேற்று உ.பி.,யில், 24 பேர் உட்பட, மொத்தம், 29 பேர் பலியாயினர். வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக, பெரும்பாலான பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்தை முடங்கி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், நேற்று குறைந்த பட்ச வெப்ப நிலை, மைனஸ், 1.1 டிகிரி செல்சியசுக்கு கீழ் இருந்தது. ஆக்ராவில், மைனஸ், 1.0 டிகிரியாகவும்; லக்னோ மற்றும் காசியாபூரில், மைனஸ், 0.2 டிகிரி செல்சியசாகவும் இருந்தது. குளிர் தாங்காமல், பாரபங்கி மற்றும் உன்னோவில், தலா, ஐந்து பேர், சித்ரகோட் மற்றும் மகோபாவில், தலா மூன்று பேர் என, உ.பி.,யில் மொத்தம், 24 பேர், கடந்த, 24 மணி நேரத்தில் பலியாகினர். இம்மாநிலத்தில், இதுவரை குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை, 199 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்திலும், குளிர் தாங்காமல், நான்கு பேர் பலியாயினர். டேராடூன் நகரில், எப்போதும் இல்லாத வகையில், நேற்று குளிர் அதிகரித்திருந்தது. பெரும்பாலான இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை, 6 டிகிரி செல்சியஸ் முதல், 13 செல்சியஸ் வரை இருந்தது. காஷ்மீரில், தொடர்ந்து தால் ஏரி உறைந்து காணப்பட்டது. இங்கு, தொடர்ந்து கடும் பனி மூட்டம் இருப்பதால், நீர் நிலைகள் அனைத்தும், உறைந்து காணப்பட்டன. ஸ்ரீநகரில், நேற்று கடும் பனி காரணமாக, 5.5 டிகிரி செல்சியசாக இருந்தது. டில்லியில் தொடர்ந்து கடும் பனி மூட்டம் இருந்தாலும், குறைந்த பட்ச வெப்ப நிலை, 3.3 டிகிரி செல்சியசாக இருந்தது. காலையில் பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவியதால், மக்கள் வீட்டை வெளியே வரவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.