காந்திகிராமம்:""ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மையை விட அதிகமான தீமையை விளைவிக்கும் என காந்திகிராம பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசினார். காந்திகிராம பல்கலையில் 29 வது பட்டமளிப்பு விழா நடந்தது. துணைவேந்தர் ராமசாமி வரவேற்றார்.
பதிவாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். பட்டங்களை வழங்கி பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசியதாவது: பல்கலை பட்டம் பெறும் மாணவர்கள், சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக, புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும். பட்டப்படிப்பின் மூலமாக, வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய தனித்திறன்களை, அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். எளிமையை வாழ்வில் கடைபிடித்து ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும்.
மனிதர்கள் தங்கள் தேவைகளை அதிகரித்து கொண்டே சென்றதால்தான், உலக வெப்பமயமாகுதல், ஓசோன் படலம் பாதிப்பு என்பது போன்ற, உலகை அச்சுறுத்தும் பிரச்னைகள் எழுந்துள்ளன. நாம் அவரவர் குடும்பத்திற்காக உழைக்கிறோம். இதேசமயம், நாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், நம்மால் இயன்ற அளவு சேவை செய்யவேண்டும்.அனைத்திற்கும் மேலாக, ஒழுக்கம், நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம். இவை இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மைகளை விட அதிகமாக தீமைகளை விளைவிக்கும்,' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.