கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடையே நேற்று ஏற்பட்ட பயங்கர மோதலில், 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஏராளமானோருக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்டன. துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதால், பதற்றம் நிலவுகிறது. மேற்கு வங்கத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசை, பதவியிலிருந்து இறக்கி காட்டியுள்ளார், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. இதனால், திரிணமுல் காங்கிரஸ் மீது கம்யூனிஸ்டுகளுக்கு கடும் கோபம் நிலவுகிறது. கடந்த, 2011 முதல், ஆங்காங்கே சிற்சில மோதல்கள் நடந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முன்னாள், எம்.எல்.ஏ., அப்துல் ரசாக் முல்லா, நேற்று முன்தினம், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அலிப்பூர் நகரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அவர்கள், அலிப்பூர் சென்று கொண்டிருந்த போது, பாமன்கட்டா என்ற இடத்தில், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களால், வழிமறித்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பகுதியின் திரிணமுல் காங்கிரஸ் தலைவர், அராபுல் இஸ்லாம் தலைமையில் வந்த அந்த கட்சியினர், கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், 15 வாகனங்கள் எரிக்கப்பட்டன; 20க்கும் மேற்பட்டோர், வெட்டப்பட்டனர். அராபுல் இஸ்லாம் தலைமையில் வந்த திரிணமுல் காங்கிரசார் தங்களை தாக்கியதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் கூறுகின்றனர். ஆனால், வாகனங்களில் வந்த கம்யூனிஸ்டுகள், தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், காருக்குள் பதுங்கி உயிர் தப்பியதாகவும், அராபுல் இஸ்லாம் கூறியுள்ளார். மேலும், கம்யூனிஸ்டுகள் தாக்கியதில், மார்பு மற்றும் காலில் காயமடைந்துள்ளதாக கூறியுள்ள அராபுல் இஸ்லாம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால், வீட்டில் ஓய்வு எடுத்து வந்த முதல்வரும், கட்சி தலைவருமான, மம்தா பானர்ஜி, மோதல் குறித்து அறிந்ததும், நேற்று மதியம், தலைமை செயலகம் விரைந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.