புதுடில்லி: மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் வகையிலான, சட்டமியற்ற தவறியதற்காக, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட், கண்டனம் தெரிவித்துள்ளது. "மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதற்கு, தடை விதிக்க, இரண்டு மாதங்களுக்குள், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு கோர்ட்டில் ஆஜராகும்படி, அழைப்பு விடுக்க நேரிடும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எச்.எல்.டாட்டூ, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: "மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதிக்க, உரிய சட்டமியற்றப்படும்' என, மத்திய அரசு சார்பில், ஏற்கனவே, பலமுறை கோர்ட்டில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது தொடர்பாக, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், தன் வாதத்தில் கூறியதாவது: இது தொடர்பான மசோதா, ஏற்கனவே, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, ஏற்கனவே ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது ஆய்வு கூட்டம், வரும், 11ல், நடக்கிறது. விரைவில் இதற்கான சட்டமியற்றப்படும். இவ்வாறு, சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.