புதுடில்லி: சகோதரன் உறவு முறை கொண்டவரை காதலித்து, அவருடன் ஓடிய, பருவ வயது பெண்ணை, மகளிர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தது தவறு என, குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட், அந்த பெண் விருப்பப்படி, யாருடனும் செல்லலாம் எனக் கூறி விடுவித்தது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த, பெயர் குறிப்பிடப்படாத ஒருவரின், பருவமடைந்த பெண்ணை, திடீரென காணவில்லை. விசாரணையில், சகோதரன் உறவு முறை கொண்ட ஒருவருடன், அந்த பெண், டில்லியில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
ஜோடியாக ஆஜர்
"பெண்ணை காணவில்லை' என, தந்தை கொடுத்த புகாரின் படி, விசாரணை நடத்திய ராஜஸ்தான் போலீசார், அந்த பெண்ணை, டில்லியில் கண்டுபிடித்தனர். ராஜஸ்தான் அழைத்து செல்லப்பட்ட அந்த ஜோடி, ஆல்வார் பகுதி, கூடுதல் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பெண்ணின் தந்தை, தன் மகளை, மைனர் பெண் என தெரிவித்து, தன்னுடன் அனுப்புமாறு கேட்டார். அதை மறுத்த மாஜிஸ்திரேட், அந்த பெண்ணை, ஜெய்ப்பூரில் உள்ள சிறுமிகள் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார்.
களேபரமானது கோர்ட்
இதை எதிர்த்து, அந்த பெண்ணின் தந்தை, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். தலைமை நீதிபதி, அல்டமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் செலமேஸ்வர், விக்ரம்ஜித் சென் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன், கடந்த, டிசம்பர், 13ம் தேதி விசாரிக்கப்பட்ட போது, கோர்ட் அறையே களேபரமானது. தந்தையுடன் செல்ல அந்த பெண் மறுத்து அடம் பிடித்தார். ஆனால், பெண்ணை, தன்னுடன் அழைத்து செல்ல உத்தரவிடுமாறு, தந்தை உருக்கமாக வேண்டினார். சிறுமி என தந்தை உறுதியாக கூறியதால், அந்த பெண்ணுக்கு, எலும்பு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த முறை நடந்த விசாரணையின் போது, நீதிமன்ற அறையில் குழப்பம் ஏற்பட்டதால், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த விசாரணை, தலைமை நீதிபதியின் அறையில் நடந்தது. ஆல்வார் மாஜிஸ்திரேட், கூடுதல் எஸ்.பி., மற்றும் காதல் வசப்பட்ட பெண், அவரின் தந்தை என பலரும் வந்திருந்தனர். விசாரணை, தலைமை நீதிபதி அறையில் ரகசியமாக நடந்தது. பெண்ணுக்கு நடத்தப்பட்ட எலும்பு பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி அல்டமஸ் கபிர், அந்த பெண்ணுக்கு, 16 - 18 வயது வரை இருக்கலாம் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை கூறி, பெண்ணின் விருப்பப்படி, யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் என, அனுமதித்தார். முன்னதாக, அந்த பெண்ணை, தேவையில்லாமல், சீர்திருத்த பள்ளியில் அடைத்த, மாஜிஸ்திரேட் மற்றும், எஸ்.பி.,யை அவர் கண்டித்தார். பின், அவர்கள் அளித்த விளக்கம் சரியாக இருந்ததால், ஏற்று கொண்ட தலைமை நீதிபதி, அந்த பெண், அவரின் விருப்பப்படி, யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் என கூறி, சீர்திருத்த பள்ளியில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டார். சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வந்த பெண், யாருடன் சென்றார் என்பது குறிப்பிடப்படவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.