பெங்களுரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், இதுவரை, 360 கேள்விகளுக்கு, இளவரசி பதில் அளித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களுரு சிறப்பு கோர்ட்டில், நடந்து வருகிறது. இவ்வழக்கில், நேற்று முன் தினம், 211 கேள்விகளுக்கும், நேற்று, 360 கேள்விகளுக்கும், இளவரசி பதிலளித்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு வந்த பண விபரம், காசோலை வழங்கியது, பணம் எடுத்தது தொடர்பான, 250 கேள்விகளுக்கு, தனக்கு எதுவும் தெரியாது என்றார். அவர் மேலும் கூறியதாவது: மன்னார்குடி இந்தியன் வங்கியில், என் பெயரிலும், என் மகன் விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோர் பெயரிலும், பணம் டெபாசிட் செய்திருப்பது உண்மை. குணபூசணி, கொடநாடு எஸ்டேட்டில் நான் பங்குதாரர். இதன் மூலமாக, வங்கியில், 3.85 கோடி ரூபாய் கடன் வாங்க மனு கொடுத்தது உண்மை. என் மகன் மைனர் என்பதால், அவரின் வங்கி கணக்குகளுக்கு, நான் கார்டியனாக உள்ளேன். போயஸ் கார்டனில் சசிகலா, சுதாகரன், அவர் மனைவி சத்யலட்சுமி, நான், என் மகன் விவேக் வசித்ததாக கூறியுள்ள ஜெயராமனை, போயஸ் தோட்டத்தில், நான் பார்த்ததில்லை. என் வாக்காளர் அட்டையில், 1988ம் ஆண்டு, நான், 36, போயஸ் கார்டனில் வசித்து வந்ததாக கூறுவது சரியல்ல. 1988ல் வாக்காளர் பட்டியலில், என் பெயரே இல்லை. மெடோ பார்ம் உட்பட பங்குதாரராக உள்ள கம்பெனிகளில், நான், "செக்' வழங்கியுள்ளதோடு, பணமும் எடுத்துள்ளேன். சசி எண்டர்பிரைசர்சில் தினகரனை, பங்குதாரராக சேர்ப்பதற்கு, வங்கியில் கணக்கு துவங்க சசிகலா கையெழுத்திட்டு, அறிமுகப்படுத்தியது குறித்து தெரியாது. சுதாகரன் வங்கி கணக்கு துவங்க, நான் தான் உதவினேன். "நமது எம்.ஜி.ஆர்.,' சசி எண்டர்பிரைசஸ், லெட்ஸ் பிராப்பர்ட்டி, மெடோ ஆக்ரா பார்ம், ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ், ஜெயா பப்ளிகேஷன், ரிவர்வே ஆக்ரோ புராடெக்ஸ், ஜெ பார்ம் ஹவுஸ் உட்பட பல்வேறு கம்பெனிகளிலிருந்து லட்சக்கணக்கான பணம் ஜெயலலிதாவின் வங்கி கணக்கிற்கும், சசிகலாவின் வங்கி கணக்கிற்கும் பலமுறை பரிமாற்றம் செய்யப்பட்டது பற்றி தெரியாது. இவ்வாறு இளவரசி பதிலளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.