Historical rise in temperature: Houses caught fire in Oz | ஆதிரேலியாவில் வரலாறு காணாத வெயில்! வீடுகள் தீ பற்றி எரிந்தன! | Dinamalar

ஆதிரேலியாவில் வரலாறு காணாத வெயில்! வீடுகள் தீ பற்றி எரிந்தன!

Added : ஜன 09, 2013 | கருத்துகள் (1)
Advertisement
ஆதிரேலியாவில் வரலாறு காணாத வெயில்!  வீடுகள் தீ பற்றி எரிந்தன!

சிட்னி. ஆஸ்திரேலியாவில் இன்று வரலாறு காணாத வெயில்அடித்தால் ஆங்காங்கே புல் புதர்கள் தீ பற்றி எரிந்தன. இதனால் பல வீடுகளும் தீயில் எரிந்து நாசம் ஆகின. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மானிய மகாணங்களில் அவசர நிலை பிரகடன படுத்தப் பட்டுள்ளது. சிட்னி அமைத்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இன்றைய வெயில் 42.3யிஇ தொட்டது. இத்துடன் பலத்த அனல் கற்றும் வீசியதால் பல இடங்களில் உள்ள புல் புதர்கள் மள மள வென தீ பிடித்து எரிய தொடங்கின. தீயுடன் பலத்த காற்று வீசியதால் தீ கட்டுகடங்காமல் 75 ஹெக்டர் தூரம் பரவின. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மானிய மகாணங்களில் இன்று மற்றும் 600 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வண்டிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீ அணைக்க போராடி வருகின்றன. இந்த தீயில் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம் ஆகின. இன்னும் பல இடங்களில் இந்த தீ, சிறிய ஊர்களை சுற்றிலும் சூழ்ந்து எரித்து கொண்டு இருப்பதால் அவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வர இயலாமல் உள்ளனர். அதே நேரத்தில் இந்த தீயால் அவர்கள் வீடுகள் எரியும் அபாயம் உள்ளதால் பத்திரமாக வெளி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் 130 இடங்களில் தீ கட்டுப்பாடின்றி எரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனல் தீ காற்றினால் மோட்டார் வேயில் சென்ற சில வாகனங்கள் தீ பிடித்து எரிந்தன. இன்றைய வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மக்கள் கூட்டம் கடற்கரைகளில் நிரம்பி வழிந்தன. மிருக காட்சி சாலையில் விலங்குகளுக்கு குளிரூட்டப்பட்ட தண்ணீர் தொடர்ந்து பீச்சிஅடிக்கும் வண்ணம் வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் மிருகங்களுக்கு நீருடன் பனிக்கட்டிகள் கொடுக்கப்பட்டன. மொத்தத்தில் இன்று ஆஸ்திரேலியா வரலாறு காணாத வெப்பத்தை கண்டது. அடுத்த வாரம் இதை விட மிக அதிக வெப்பம் தாக்கும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-நமது செய்தியாளர் சுந்தர், ஆஸ்திரேலியா-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-201310:35:04 IST Report Abuse
Swaminathan Nath ஒரு பக்கம் கடும் குளிர், மறுபக்கம் வெயில் என வாழ்கை சாமி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை