E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கறுப்பு பொங்கல் இல்லை! விஜயகாந்த் திடீர் மாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 ஜன
2013
01:48
பதிவு செய்த நாள்
ஜன 09,2013 00:45

சென்னை: ""தஞ்சாவூரில் வரும், 11ம் தேதி நடக்கும் விழாவில், தே.மு.தி.க., சார்பில், விவசாயிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்,'' என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:

காவிரியில், எந்தளவிற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதை அறிந்து, முன்கூட்டியே விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தால், சாகுபடியை குறைத்து, விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகாமல் தப்பியிருப்பர்.அதை செய்யாததால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவி கேட்டு நடுரோட்டில், போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்துகின்றனர். ஒரு சிலர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலையும் செய்துள்ளனர்.

தே.மு.தி.க., சார்பில் வரும், 11ம் தேதி தஞ்சாவூரில், பொங்கல் விழா பொதுக் கூட்டம் நடக்கிறது. என் தலைமையில் நடக்கும், இந்த விழாவில் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும். தற்கொலை செய்துக் கொண்ட, 12 விவசாயிகளின் குடும்பத்திற்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதே போன்று மாவட்ட செயலர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும், பொங்கல் பொருட்களையும், உதவிகளையும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கவேண்டும். இவ்வாறு, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், மின்வெட்டால் வேலையிழப்பு, பாலியல் பலாத்காரம், விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட காரணங்களால், இந்தாண்டு கறுப்பு பொங்கல் கொண்டாடப்போவதாக அறிவித்திருந்தார். அதே நேரத்தில் தஞ்சாவூரில், பொங்கல் பொருட்கள் மற்றும் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடக்கும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

விட்டால் சர்ச்சையாகும்:



இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், பொங்கல் பண்டிகை கொண்டாட கட்சியினருக்கு விஜயகாந்த் திடீரென ஆலோசனை வழங்கியுள்ளார். பக்ரீத், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவிட்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் விட்டால் சர்ச்சையாகும் என்பதால், இப்புதிய முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளதாக தெரிகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜன-201312:27:54 IST Report Abuse
Yaro Oruvan இது ஒரு சீரியஸான காமெடி பீஸ் அரசியல்ல.... காமெடியான சீரியஸ் கதாநாயகன் சினிமாவுல... மொத்ததுல அதுலயும் சேத்தி இல்ல இதுலயும் சேத்தி இல்ல...
Rate this:
3 members
0 members
0 members
Share this comment
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
09-ஜன-201319:03:22 IST Report Abuse
raj tbm அதான் பாதி நிலத்தை பிளாட் போட்டு பரிச்சாச்சே.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
raj - male,மாலத்தீவு
09-ஜன-201312:03:39 IST Report Abuse
raj நல்ல எதிர்க்கட்சி தலைவர்....... வாழ்க வளமுடன்
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
09-ஜன-201311:53:38 IST Report Abuse
சகுனி கருப்பு கண்ணாடி போட்ட கருப்பு எம்ஜியார் கருப்பு பொங்கல் இல்லைன்னு சொன்னது கடு(ரு)ப்பா இருக்கு ...
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel
selvamaharajan - Yamuna Nagar, Haryana,இந்தியா
09-ஜன-201311:42:10 IST Report Abuse
selvamaharajan பாவம் அவரே கன்ப்பியூஸ் ஆயிட்டாரு....
Rate this:
4 members
0 members
6 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
09-ஜன-201311:37:35 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு...விஜயகாந்த் திடீர் பல்டி...விரைவில் தினமலரில்
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
09-ஜன-201310:09:35 IST Report Abuse
R.Saminathan தமிழகத்தில் நல்லது செஞ்சால் போதும் மக்களுக்கு தே.மு.தி.க. பல்லாண்டு வாழ்க தமிழகத்தில் தேமுதிக...
Rate this:
30 members
2 members
145 members
Share this comment
nagaraj - chennai,இந்தியா
09-ஜன-201311:05:05 IST Report Abuse
nagarajஉண்மை சாமிநாத் ...
Rate this:
8 members
1 members
21 members
Share this comment
Cancel
dharma - nagpur,இந்தியா
09-ஜன-201309:46:52 IST Report Abuse
dharma அதே நேரத்தில் தஞ்சாவூரில், பொங்கல் பொருட்கள் மற்றும் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடக்கும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இவ்வளவாது செய்கிறாரே அதற்காவது பாராட்ட வேண்டும். தினமலர். அதை விட்டு விட்டு எல்லாவற்றிக்கும் கேப்டனை நக்கல் செய்வது தகுந்ததல்ல
Rate this:
18 members
2 members
112 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
09-ஜன-201309:01:39 IST Report Abuse
Pannadai Pandian இவரு இப்ப தன் வாய்க்கு தானே கட்டுப்பாடு போட்டுள்ளார். அது நல்லது.
Rate this:
6 members
4 members
33 members
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-201308:56:25 IST Report Abuse
Swaminathan Nath பொங்கல் கருப்பு இல்லை , கரும்பு பொங்கல் , தவறாக சொல்லிவிட்டோம், ஹாய் ஹாய் ஹீஈஈஈஈஈ பொங்கல் வாழ்த்துக்கள், எல்ல வாசகர்களுக்கும்.
Rate this:
21 members
1 members
23 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.