Advertisement
அமெரிக்க லாட்டரியில் ரூ. 5.5 கோடி வென்றவர் மர்ம சாவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,00:45 IST

சிகாகோ: அமெரிக்க லாட்டரியில், 5.5 கோடி ரூபாய் பரிசு வென்றவர், மறுநாள், திடீரென மரணமடைந்தார். இவர் உடலில், சையனைடு உள்ளதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின், இலினாய்ஸ் மாகாணத்தின், சிகாகோ நகருக்கு அருகே, சலவை கடை நடத்தி வந்தவர் உருஸ் கான், 46; மனைவி, ஷபானா அன்சாரி; மகள் ஜாஸ்மீன். கடந்த ஆண்டு, ஜூன் மாதம், இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு, 5.5 கோடிரூபாய் பரிசு விழுந்தது. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த உருஸ்கான், அதைக் கொண்டாட, உறவினர்களை அழைத்து, விருந்து வைத்தார்; மறுநாள், அதாவது, ஜூலை, 20ம் தேதியே, இவர், திடீரென இறந்து விட்டார். மொத்த தொகையான, 5.5 கோடி ரூபாயில், வரி பிடித்தம் போக, 3.3 கோடி, இவருக்கு கிடைத்தது. முதல் தவணையாக, 2.33 கோடி ரூபாய்க்கான காசோலை, ஆகஸ்ட், 15ம்தேதி தான், இவர் பெயருக்கு, வந்து சேர்ந்தது. தற்போது, இவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இவரது உடலில் சயனைடு கலந்திருந்தது என, குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது லாட்டரி பணத்தை அபகரிக்க, குடும்ப உறுப்பினர்களே, இவரை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் உலகம் செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Ram Santhya - Tirunelveli,இந்தியா
09-ஜன-201311:26:39 IST Report Abuse
Ram Santhya பணம் பத்தும் செய்யும் என்பதை மறந்து விட்டாயே உருஸ் கான்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.