லாகூர்: இரண்டு மாத ஆண் குழந்தையை, அதன் தாய், வீட்டின் மேற்கூரையில் இருந்து வீசி எறிந்து கொலை செய்தார். பாகிஸ்தான், லாகூர், சாப்சாசர் பகுதியைச் சேர்ந்தவர் அலி ராசா. டாக்டர். இவரது மனைவி நூர். இவரும் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு, இரண்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த, 6ம் தேதி, அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் பேசிய நூர், ""என் கணவர் விரைவில் இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல உள்ளார். என்னை இங்கு தனியே விட்டு விட்டு சென்றால், அவரது பெற்றோர் என்னை கொன்று விடுவார்கள்,'' என, தெரிவித்துள்ளார். இதனால், டாக்டர் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டாக்டர் நூர், குழந்தையுடன் வீட்டு மேற்கூரைக்குச் சென்றார். அங்கிருந்து, அவரது இரண்டு மாத குழந்தையை கீழே வீசி எறிந்தார். இதில், பலத்த காயமடைந்து, குழந்தை இறந்தது. இதையடுத்து, நூரை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.