வாஷிங்டன்: பால்வளி மண்டலத்தில், பூமியைப் போன்று, 1,700 கோடி கிரகங்கள், உள்ளதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். அமெரிக்காவின், நாசா விண்வெளி மையம், "கெப்ளர்' விண்கலத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், பால்வளி மண்டலத்தில், 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டில், 2,400 பேர், கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம், ஆய்வு மேற்கொண்டனர். பால்வளி மண்டலத்தில் உள்ள, 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்களில், 1,700 கோடி நட்சத்திரங்கள், பூமியைப் போன்று உள்ளன. ஹார்வர்டு - சுமித்ஸ்னோனியன் வானியல் மைய விஞ்ஞானியான, பிரான்காய்ஸ் பிரஸ்சின் மற்றும் அவரது சக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், "பால்வளி மண்டலத்தில், 50 சதவீத கிரகங்கள் பூமியைப் போன்றும், அதை விட பெரியதாகவும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சூரியனைப் போன்ற ஒளிரும் கிரகங்களாகவே உள்ளன. இவை, பூமியை விட, 0.8 முதல், 1.25 மடங்கு பெரியவைகளாகவே காணப்படுகின்றன' என, கண்டறியப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.