Advertisement
கோத்தகிரியில் விதிமீறிய கட்டடங்கள் அதிகரிப்பு:"மவுனம்' சாதிக்கும் மாவட்ட நிர்வாகத்தால் அதிருப்தி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறை மீறிய கட்டடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில்,"மாஸ்டர் பிளான்' உத்தரவை மீறும் வகையில், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, வீடுகள் என்ற பெயரில், சொகுசு பங்களாக்கள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன.
தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறு கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு 3 முதல் 5 வரை தண்ணீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம், சாதாரண வீடுகளுக்கு நிர்ணயித்துள்ள வரி மட்டுமே, வசூலிக்கப்படுகிறது. இதனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை முறைப்படுத்த வேண்டிய உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மவுனம் காப்பதால், இது போன்ற விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட விதிமுறை மீறிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்புக்காக அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ள இந்த கட்டடங்கள், தற்போது வர்த்தக நோக்கில் செயல்படுகின்றன.
"விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து, ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகாரிகள் கண் துடைப்புக்காக ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இதுவரை விதிமீறிய கட்டட உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு உள் ளாட்சி அமைப்பினர் பலரும் உடந்தையாக உள்ளனர்.
இந்த பட்டியலில், கோத்தகிரி - குன்னூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி, காமராஜர் சதுக்கம் - கிரீன்வேலி செல்லும் சாலையில் தனியார் அடுக்குமாடி விடுதி, கார்சலி சாலையில் பல சொகுசு பங்களாக்கள் இடம் பெற்றுள்ளன.
இதைதவிர, நகரை ஒட்டியுள்ள பகுதியிலும் புற்றீசல் போல் விதிமீறிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்துக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோத்தகிரி பேரூராட்சி தலைவர் வாப்பு கூறுகையில்,""கடந்த ஆட்சியின் போது தான் அதிகளவில் விதிமீறிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நான் பொறுப்பேற்ற நாளிலிருந்து விதிமீறிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து மிக விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.