Advertisement
பைக் ஷோரூமில் தீ விபத்து ரூ. 2 கோடி மதிப்பு வாகனங்கள் நாசம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
01:54

வேலூர்: வேலூரில் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
வேலூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தையொட்டி, பாலமுருகன் ஆட்டோமொபைல்ஸ் ஷோரும் உள்ளது. இங்கு டி.வி.எஸ்., நிறுவன பைக்குகள் விற்பனை செய்கின்றனர். இதன் தரை தளத்தில் பழுது பார்க்கும் பிரிவும், வாகனக் கிடங்கும் உள்ளது. முதல் தளத்தில் ஷோரும் உள்ளது. பொங்கலையொட்டி சிறப்பு விற்பனை நடந்து வந்ததால், நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன் தினம் இரவு, 9.45 மணிக்கு ஊழியர்கள் ஷோரூமை மூடிவிட்டு சென்றனர். இரவு, 12.30 மணிக்கு முதல் தளத்தில் இருந்து திடீரென தீபிடித்து எரிந்தது. அங்கு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனங்களிலும் தீப்பற்றியதால், வாகனங்கள் அனைத்தும் எரிந்தது. தீ பிடித்தது குறித்து தகவல் அறிந்ததும் வேலூரில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று, 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஷோரூமில் வைத்திருந்த, 150 வண்டிகள், 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் எரிந்து நாசமான.
மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர். வேலூர் வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர். பாலமுருகன் ஷோரூம் எம்.டி., சம்பத் குமார் கூறுகையில், ""இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த சாம்பலாகியுள்ளது,'' என்றார்.
சதி வேலை காரணமாக தீ பிடித்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.