Advertisement
ஒசூரில் ரூ.9 லட்ச மதிப்பு பொருட்களுடன் கடத்தப்பட்ட சரக்கு லாரி கர்நாடகாவில் மீட்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
01:56

ஓசூர்: ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில், 9 லட்சம் ரூபாய் வாகன உதிரிபாகங்களுடன் கடத்தப்பட்ட சரக்கு லாரி, கர்நாடகா மாநிலத்தில் நேற்று மீட்கப்பட்டது.
ஓசூர் அருகே கொத்தக்கொண்டப்பள்ளியில் டி.வி.எஸ்., தொழிற்சாலைக்கு கடந்த, 5ம் தேதி நான்கு சக்கரம் மற்றும் இரு கர வானங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை ஒரு சரக்கு லாரி ஏற்றி வந்தது. லாரியை ஆவடியை சேர்ந்த டிரைவர் கோவிந்தன், 27 என்பவர் ஓட்டி வந்தார்.
கொத்தகொண்டப்பள்ளியில் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ, லாரியை சரக்குடன் கள்ளச்சாவி போட்டு திருச் சென்றது தெரிந்தது.
மத்திகிரி போலீஸார், டிரைவரை பிடித்து விசாரித்தனர். லாரியில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடைய உதிரிபாகங்கள் இருந்தன. இதனால், போலீஸார் அண்டை மாநிலமான கர்நாடகா போலீஸாருக்கு லாரியை நம்பரை கூறி உஷார்ப்படுத்தினர்.
தமிழக, கர்நாடகா சோதனைச்சாவடிகளில் இரு மாநில போலீஸாரும் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டதால், லாரியை கடத்தி சென்ற நபர்களால் லாரியை தொடர்ந்து கடத்தி செல்ல முடியவில்லை. இதனால், லாரியை கர்நாடகா மாநிலம் திருமலைஹள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட ஒசகோட்டா-சின்னதிருப்பதி சாலையில் நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து சென்ற கர்நாடகா மாநில போலீஸார், லாரியை மீட்டு தமிழக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மத்திகிரி போலீஸார் அங்கு சென்று லாரியை மீட்டு வந்து, உரியவரிடம் ஒப்படைத்தனர். இதனால், மூன்று நாள் கடத்தல் விவரகாரம் ஒருவழியாக முடிவடைந்ததால், போலீஸார் நிம்மதியடைந்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.