Shoe attack on Ration Shop Staff | ரேஷன் கடை ஊழியருக்கு செருப்படி ‌கொடுத்த பெண் !| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியருக்கு செருப்படி ‌கொடுத்த பெண் !

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013 | கருத்துகள் (33)
Advertisement
Shoe attack on Ration Shop Staff ரேஷன் கடை ஊழியருக்கு செருப்டி ‌கொடுத்த பெண் !

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ரேஷன்கார்டில் உள்தாள் பொருத்த மறுத்த, ரேஷன்கடை ஊழியரை, ஆத்திரமடைந்த பெண், செருப்பால் அடித்தார். திருவாரூர் மாவட்டம், பாடகசேரியைச் சேர்ந்தவர் தமிழ் அழகன், 52; இவர், தூத்துக்குடி, கால்டுவெல் காலனியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நடத்தப்படும், அமுதம் சிறப்பு அங்காடியில் (ரேஷன் கடை), பட்டியல் எழுத்தராக பணிபுரிகிறார்.
உள்தாள் என்னாச்சு ? நேற்று காலை, 9:30 மணியளவில், அக்கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த உத்திரம், 50, என்ற பெண் வந்துள்ளார். தன் ரேஷன் கார்டில், உள்தாள் பொருத்திதருமாறு அவர் கேட்டுள்ளார். "அரசு உத்தரவுப்படி, பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் வழங்கப்படுவதை ஒட்டி, உள்தாள் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொங்கல் முடிந்ததும் வாருங்கள்' என, தமிழ் அழகன் தெரிவித்துள்ளார்.செருப்பால் அடித்தார் : அதை ஏற்க மறுத்த உத்திரம், "ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, அடிக்கடி வீணாக அலைய வைக்கிறீர்கள்' என, குற்றம் சாட்டினார். இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த உத்திரம், காலில் இருந்து செருப்பை கழற்றி, அதை, தமிழ் அழகனின் முகத்தில், ஓங்கி அடித்து, அங்கிருந்து சென்று விட்டார். இச்சம்பவம், எடையாளர் ஆசைத்தம்பி, பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது.

ரேஷன் கடைகள் திடீர் மூடல் : இதையடுத்து, தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த தமிழ் அழகன், நடந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். இத்தகவல் பரவியதும், மாவட்டம் முழுவதும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நடத்தப்படும், 98 ரேஷன் கடைகளும் மூடப்பட்டன. அதன் ஊழியர்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, தமிழ் அழகனை, செருப்பால் அடித்த, உத்திரத்தை, உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். அவர்களுடன், மாவட்ட வழங்கல் அதிகாரி பஷீர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கிருஷ்ணன் பேசினர்.

கொலை மிரட்டல் வழக்கு : உத்திரம் மீது, "தமிழ் அழகனை, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தது; செருப்பால் அடித்து அவமானப்படுத்தியது; கொலை மிரட்டல் விடுத்தது' ஆகிய பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "விரைவில் அவரை கைது செய்வோம்' என, தென்பாகம் இன்ஸ்பெக்டர் குருநாதன் தெரிவித்தார். அதை, ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, மதியம், 2:30 மணியளவில், முற்றுகை முடிவுக்கு வந்து, ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. பிரச்னை நடந்த கால்டுவெல் காலனி கடைக்கு,போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mr y - thamizhnadu,இந்தியா
09-ஜன-201318:57:57 IST Report Abuse
Mr y தமிழ் அழகன் என்னை மன்னிக்கணும்... இந்த செருப்படி தப்பு செய்யும் எல்லோர்க்கும் பாடமாக இருக்குமா? அரசாங்க ஊழியர்களே...வழ வழா கொழ கொழன்னு வேலையை பார்க்காம... உடனுக்குடன் பொது மக்களின் வேலையை நீங்கள் முடித்து கொடுத்தால் யார் கொடுப்பார் உங்களுக்கு உருப்படி(இலஞ்சம்)? அதனால் தான் இந்த செருப்படி?
Rate this:
Share this comment
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
09-ஜன-201316:13:21 IST Report Abuse
Vaishnavi.Ne இதெல்லாம் அரசின் குழப்பமான முடிவினால் தான். முதலில் உள் தாள் ஓட்ட ஆணையிட்டு, பின் மிகவும் தாமதமாக முடிவெடுத்து பொங்கல் பரிசு கொடுக்க ஆணையிட்டு, அதனால் உள் தாள் ஓட்டும் பணியை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து .... ஒரே குழப்பம். இதனால் பாதிக்கப்பட்டது நியாய விலை கடை ஊழியரே பாவம் அவர். அரசின் முடிவை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே?
Rate this:
Share this comment
Cancel
Conjivaram Rajan Gopalkrishnan - Chennai,இந்தியா
09-ஜன-201315:17:23 IST Report Abuse
Conjivaram Rajan Gopalkrishnan கடை ஊழியர் படத்தை பார்க்கும்போது அவர் தூங்கிகொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது .. இருந்தாலும் இவர்கள் மக்களை அலைகழிக்க வைப்பதில் வல்லவர்கள் ,, பொறுக்கமுடியாமல் இந்த பெண்மணி உக்கிரகமாக நடந்துகொண்டுவிட்டார் .. தவறுதான் .. இருந்தாலும் அந்த பெண்மணிக்கு பொதுமக்கள் ஆதரவாக பேசி இருவருக்கும் சமாதானம் ஏற்படும்படி செய்யவேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
09-ஜன-201314:19:03 IST Report Abuse
G.Krishnan எதற்கு தாள் ஓட்டுவது. . . . புதியதாக கொடுக்க முடியவில்லை என்றால். . .அது என்ன காரணமாக இருந்தாலும் சரி . . .மக்களை வீணாக அலைய வைப்பது / அளக்களிப்பது கண்டனத்துக்குகுரியது. . . . . . .தவறு செய்தது யார். . . . . புதிய குடும்ப அட்டை குடுக்க வேண்டியது அரசின் கடமை. . . . .புதிய அட்டை கொடுக்கும் வரை பழைய அட்டை செல்லும் என்று ஒரு அறிவிக்கை செய்ய வேண்டியது தானே . . . . . . . . .
Rate this:
Share this comment
Cancel
siruppanikoothan - canberra ,ஆஸ்திரேலியா
09-ஜன-201313:49:37 IST Report Abuse
siruppanikoothan அடி வாங்கியவன் ஒரு நாளுக்கு சுமார் 5000 கிம்பளம் சம்பாதிப்பான் பார்பதற்கு பைத்தியகாரன்போல் தெரிவான் பையை பார்த்தால் பணத்தை எண்ண முடியாது அந்தம்மா கொடுத்தது சரிதான்
Rate this:
Share this comment
Cancel
"Karuthu" KANDASAMY - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-201313:19:49 IST Report Abuse
புலி வருது புலி வருதுன்னு சொல்லி இப்போ உண்மையாகவே புலி வந்திருச்சு. என்ன பண்ணுறது.
Rate this:
Share this comment
Cancel
Ding Dong - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-201312:40:01 IST Report Abuse
Ding Dong உண்மையான பெண் சிங்கம் வாழ்க........... பொருத்தது போதும் மக்களே, சரியாக வேலை செய்யாத ஆள்களை அடித்தல் புத்தி வரும்.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
09-ஜன-201311:43:12 IST Report Abuse
LAX ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமல்ல பொதுமக்களை அலைக்கழிக்கும் அனைத்து அரசு ஊழியர்களே உஷார்.. உஷார்.... சாது மிரண்டால் காடு கொள்ளாது.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
09-ஜன-201311:35:39 IST Report Abuse
LAX ரேஷன் கடை ஊழியர்கள் மற்ற நேரங்களில் பொதுமக்களை அலைக்கழிக்கும்போது இப்படி செய்திருந்தால் அது மிகவும் வரவேற்கத் தகுந்ததே. ஆனால் உண்மையாகவே பொங்கல் பொருட்கள் வழங்குவதற்காக உள்தாள் ஒட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் பொங்கல் முடிந்தவுடன் (18.01.2013) உள்தாள் ஒட்டும் பணி மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அரசே அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் அதை அறியாத இப்பெண்மணி எப்போதும் ரேஷன்கடை ஊழியர்கள் இவ்வாறு அலைக்கழிப்பது போல் இப்போதும் செய்கிறார்கள் என நினைத்து போட்டு சாத்திவிட்டார். ஊழியர்களே திருந்துங்கள். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல், தவறு செய்யும்போதெல்லாம், தப்பிவிட்டீர்கள் ஆனால் இப்போது தவறே செய்யாதபோது வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டீர்கள். என்னதான் போராட்டம் நடத்தி அந்த பெண்ணுக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி செய்தாலும், வாங்கிய அடி வாங்கியதுதானே. காண்பிக்கும்போது, இந்த சம்பவத்தில் (அவர்மீது இதில் எந்த தவறும் இல்லாதபோது) இவரது படம் வெளியிடுவதைத் தவிர்த்திருக்கலாம். பாவம் இப்போதாவது படத்தை நீக்கிவிடுங்கள் ப்ளீஸ். ஆனால் ரேஷன் கடை ஊழியர்களே பொதுமக்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். பொறுத்ததுபோதும் என பொங்கி எழுந்தால் அப்புறம் உங்க பாடு அம்பேல்தான். உடனே திருந்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
vanaraja - Cumbum,இந்தியா
09-ஜன-201311:33:35 IST Report Abuse
vanaraja அடேயப்பா ஒரு செருப்படிக்கே இத்தனை பாராட்டுகள் என்றால் பாருங்கள். எல்லாரும் செருப்படி கொடுக்க ஆரம்பித்தால் ? போங்க நாடே திருந்தி விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை