நாமக்கல்: அனுமதியின்றி ஷேர் ஆட்டோ இயக்கப்படுவதால், அரசு பஸ்களின் வருவாய் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், வருவாய் இழப்பு காரணமாக, மினி பஸ்கள் இயக்கத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. சுற்று வட்டார கிராமப்புறங்களிலும் ஏராளமான தறிப்பட்டறைகள், விசைத்தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
அதனால், கிராமப் பகுதியில் இருந்து, நகர் பகுதிக் கூலி வேலைக்கு வந்து, செல்லும் மக்களும், நகர்பகுதியில் இருந்து உதிரி பாகங்கள் வாங்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமான மக்கள் நகர் புறத்தை நோக்கி தினமும் படையெடுக்கின்றனர். நேரத்தை குறைப்பதற்கு ஆட்டோவை பிடித்து செல்வது அதிகரித்துள்ளது. அதை பயன்படுத்தி, பயணிகள் ஆட்டோவை, "ஷேர் ஆட்டோவாக' மாற்றி "கல்லா' கட்டி வருகின்றனர். குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், அரசு அனுமதியின்றி ஷேர் ஆட்டோக்களாக இயக்கப்படுகிறது.
இந்த ஷேர் ஆட்டோக்கள், பள்ளிபாளையத்தில் இருந்து வெப்படை, குமாரப்பாளையம் வரையும், குமாரபாளையத்தில் இருந்து வெப்படை, சங்ககிரி பிரிவு சாலை வரைக்கும் வந்து செல்கின்றன.
ஷேர் ஆட்டோக்கள் இயக்குவதால், அப்பகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் மற்றும் மினி பஸ் ஆகியவற்றின் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போதிய வருமானம் இன்றி, மினி பஸ்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசு பஸ் கண்டக்டர்கள் சிலர் கூறியதாவது:
பள்ளிபாளையம்,வெப்படை, குமாரபாளையம் வழித்தடங்களில், 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு பஸ்சும் தினமும், எட்டு முறை என, 16 சிங்கிள் வந்து செல்கிறது. முன்பு, ஒரு பஸ்சில், நாள் ஒன்றுக்கு, பத்தாயிரம் ரூபாய் கலெக்ஷன் வந்தது. "ஷேர் ஆட்டோ'க்கள் ஆதிக்கத்தால், தினசரி வசூல், 4,000 ரூபாயாக குறைந்துள்ளது.
இது சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். அரசு பஸ்களில் வருவாய் அதிகரிக்க, அனுமதியின்றி இயக்கப்படும் ஷேர் ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.