நாமக்கல்: ""பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாடுப் போட்டி நடத்த மாவட்ட அமைப்பு சார்பில், நிதி தருவார்களா என எதிர்பார்க்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு செலவு செய்து, போட்டியை நடத்த வேண்டும்,'' என, மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வன் பேசினார்.
நாமக்கல் மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
வெண்ணந்தூரில் நடந்த இளைஞரணி கூட்டததில், ஆயிரம் பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இளைஞரணி நிர்வாகிகள் உறுப்பினர் படிவங்களை அதிகளவில் பெற்று, உறுப்பினர் சேர்க்க வேண்டும்.
சென்னையில், 4ம் தேதி நடந்த கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின் கூறியது போல் நகர, ஒன்றியங்களில், நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து, பொங்கல் பண்டிகையையொட்டி கிரிக்கெட், கபடி மற்றும் கோலப்போட்டி, மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி நடத்தி, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும்.
போட்டி நடத்த மாவட்ட அமைப்பு சார்பில், நிதி தருவார்களா என எதிர்பார்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு செலவு செய்து, போட்டியை நடத்த வேண்டும்.
பொங்கல் பண்டிகைக்கு பின், அரசின் குறைகள் குறித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தெரியப்படுத்துங்கள். இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் தாண்டவன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ் வரவேற்றார்.
தொடர்ந்து, இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து பேசினர். மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில், ஆனந்த், திருமுருகன், முருகேசன், கதிர்வேல், நகர துணை அமைப்பாளர் கோபிகிருஷ்ணன் உட்பட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.