சேலம்: தி.மு.க., தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்குவதற்கு, கருணாநிதி தார்மீக ஆதரவு அளித்துள்ளார். இதை வரவேற்று, சேலம் மாநகர, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
தி.மு.க.,வில், அடுத்த தலைவர் யார் என்பதை அறிய, அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் நடந்த பல்வேறு கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழாவில், ஸ்டாலின் அடுத்த தலைவர் என்பதற்கான ஆதரவை, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளிப்படையாக அறிவித்தார். இதற்கு, அழகிரி தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது.
சேலம் மாவட்டத்தில், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை, கட்சியில் எந்தவித பிளவும் ஏற்படாத நிலை இருந்தது. தற்போது, எம்.பி., செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மற்றும் மாநகர நிர்வாகிகள் பலர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க., தலைவர் பதவியை பொறுத்தமட்டில், உள்கட்சி தேர்தல் முடிவு அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஸ்டாலினை தலைவராக முன்மொழிந்து, கருணாநிதி அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து, சேலம் மாநகர, தி.மு.க., சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல், மேலும் பல மாவட்டங்களிலும், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.