ப.வேலூர்: "காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, ஜேடர்பாளையம் ராஜவாய்க்காலில், ஆறு கி.மீ., தூரத்திற்கு படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகளை, பொதுப்பணித் துறையினர் அகற்றினர்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. அங்கு துவங்கி மோகனூர் வரை, பல ஆயிரக்கணக்கான விளைநிலம் காவிரி மூலம் பாசன வசதி பெறுகிறது. விளைநிலங்களின் பாசன வசதிக்காக, ஜேடர்பாளையத்தில் காவிரியையொட்டி ராஜவாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்கால் ஜேடர்பாளையம், ஆனங்கூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு வழியாக, 20 கி.மீ., தாரம் வரை பாய்ந்து செல்கிறது. ராஜவாய்க்கால் துவங்கும் இடம் முதல், ஆறு கி.மீ., தூரத்துக்கு ஆகாயத்தாமரை படர்ந்து காணப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், அதில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையால், இருக்கும் தண்ணீரும் ஆவியாகும் நிலை நிலவியது.
அது பற்றி, "காலைக்கதிர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து, கடந்த சில தினங்களாக, ராஜவாய்க்காலில் இருந்த ஆகாயத்தாமரைகளை, பொதுப்பணித்துறையினர் முற்றிலுமாக அகற்றம் செய்தனர்.
இதனால், ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.