கரூர்: புதிய பஸ்ஸ்டாண்டுக்கு இலவசமாக நிலம் வழ ங்க, விண்ணப்பம் வழங்கியவர்கள், அதில் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதால், திட்டமிட்டப்படி கரூர் பஸ்ஸ்டாண்ட் மாற்றப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலிருந்து, கரூர் என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாகும் முன்பு, கடந்த, 1984ம் ஆண்டு முதல், தற்போது உள்ள இடத்தில் பஸ்ஸ்டாண்ட் செயல்பட துவங்கியது. ஆரம்பத்தில், 50 பஸ்கள் நிறுத்தப்படும் வகையில் இருந்த பஸ்ஸ்டாண்ட், பிறகு, நான்கு ஆண்டுகளில், 70 பஸ்கள் வரை நிறுத்தும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, "ஏ' கிரேடு அந்தஸ்து பெற்றது.
கரூர் தொழில் நகரம் என்பதால், இங்கு தினமும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல மாவட்டங்களிலிருந்து வந்து செல்கின்றனர். இதனால், கரூர் நகரப்பகுதிகளில் ஏற்படும், கடும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க, பஸ்ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில் கரூர் பஸ்ஸ்டாண்டை புற நகருக்கு மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த, 2011ம் ஆண்டு அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்று கொண்ட பிறகு, கரூர் பஸ்ஸ்டாண்டை மாற்ற மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து கரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம், 10ம் தேதி, பஸ்ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, 12ம் தேதி புதிய பஸ் ஸ்டாண்டுக்காக தானமாக நிலம் கேட்டு, கரூர் நகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், கரூரைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர், கரூர் பஸ்ஸ்டாண்டுக்கு தானமாக நிலம் வழங்க, நகராட்சியிடம் விண்ணப்பம் வழங்கினர். இதில், ஒருவர் அளித்துள்ள விண்ணப்பத்தில், கரூர் நகராட்சிக்கு, எட்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அதன்படி, தானமாக கொடுக்கப்படும் நிலத்தை பஸ்ஸ்டாண்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஐந்து ஆண்டுகளுக்குள், பஸ்ஸ்டாண்டை அமைத்து பயன்படுத்த வேண்டும், ஐந்தாண்டுக்குள் பஸ்ஸ்டாண்ட் கட்ட தவறினால், தானனமாக கொடுத்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும், பஸ்ஸ்ட õண்டுக்கு கொடுக்கப்படும் நிலத்தோடு, 50 அடி அகலம் உள்ள நிலமும் கொடுக்கப்படும், அதி ல், நகராட்சி தரப்பில் அமைக்கப்படும் ரோட்டை, பயன்படுத்தி கொள்ள உரிமை உண்டு, மேற்படி ரோடுகளின் வழியாக செல்லும் மின் இணைப்புகள், குடிநீர் குழாய் மூலம், எங்களுடைய நிலங்களுக்கு, மின் இணைப்பு, குடிநீர் குழாய் ஏற்படுத்தி கொள்ள உரிமை உண்டு, எந்த காரணத்தை கொண்டும், பஸ்ஸ்டாண்ட் அமைக்க கொடுக்கப் படும் நிலத்துக்கு அதிகமாகவோ அல்லது சாலை அமைக்க, 50 அடிக்கு அதிகமாகவோ நகராட்சி நிர்வாகம் கூடுதல் விஸ்தீர்ணம் கேட்க கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸ்டாண்டை பொறுத்தவரை, எதிர்காலத்தில் பல்வேறு பணிகளுக்காக விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் தானமாக வழங்க உள்ளவர்கள், கூடுதல் இடம் தர மறுத்து, நிபந்தனைகளை விதித்துள்ளதால், எதிர்காலத்தில், புதிய கரூர் பஸ்ஸ்டாண்டில் எந்த ஒரு விரிவாக்க பணியும் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
"பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு, தனியாரிடம் நிலம் தானமாக பெற்று, கரூர் பஸ் ஸ்டாண்டை பல கோடி ரூபாய் செலவில் அமைப்பதை விட, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், புதிய பஸ்ஸ்டாண்டை அமைப்பதுதான் எதி ர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்' என, கரூர் மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
* வழக்கு, நிபந்தனைகளால் பஸ் ஸ்டாண்ட் மாறுமா?: கரூர் பஸ்ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்றுவதை எதிர்த்து சிலர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ள நிலையில், பஸ்ஸ்டாண்டுக்கு இடம் தானமாக வழங்க முன்வந்துள்ளவர்கள், விதித்துள்ள கடும் நிபந்தனைகளால், கரூர் பஸ் ஸ்டாண்ட் இடம் மாறுவதில் தொடர்ந்து பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கரூர் நகரில் மிக பெரிய நிறுவனமான ......... பாப்ரிக்ஸ் ஒரு 100 acre நிலம் வைத்து உள்ளார்கள் , அதிலிருந்து ஓர் 15 acre தானமாக ???? கொடுப்பதன் மூலம் மீதம் உள்ள 85 acre அவர் வைத்த விலைக்கு விற்க முடியும் , பிறகென்ன ப்ரீயா கிடைத்தா இந்த நகராட்சி மக்களை பற்றி கவலையா படபோகுது ? டேய் கரூரில் இருந்து மதுரை , சேலம் , கோவை , திருச்சி இது போன்ற அணைத்து ஊர்களுக்கும் செல்ல எந்த இடம் நடுவில் உள்ளது , பொதுமக்களுக்கு உதவுகிற மாதிரி ஒரு இடத்தை தேர்வு செய்யுங்க? ஊர் முழுக்க இருக்கிற பொறம்போக்கு நிலங்களை முதலில் மீட்டு இத விட பெரிய பேருந்து நிலையம் கட்டுங்க.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.