தஞ்சாவூர்: ""தமிழகத்தில், அழிந்து வரும் நீலகிரி செம்மறியாடு இனத்தை காப்பாற்றும் வகையில், 76 லட்சம் ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும்,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பிரபாகரன் கூறினார்.
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியிலுள்ள கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு பற்றிய கண்காட்சி நடந்தது. கண்காட்சி துவக்கவிழாவுக்கு, கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேராசிரியர் புண்ணியமூர்த்தி வரவேற்றார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில், கலப்பின காளைகள், நீலகிரி செம்மறியாடுகள், நன்னீர் மீன் வளர்ப் பு, கலப்பின காடைகள், ஜப்பா ன் காடைகள் வளர்ப்பு முறை கு றி த்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை விரிவாக்க கல்வி இயக்குனர் சந்திரகாசன், ஒரத்தநாடு கால்நடை கல்லூரி முதல்வர் வீரபாண்டியன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் அபுகலாம், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ரகுவத்சாரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சையது சமீம் உள்பட பலர் பேசினார்.
பின் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த, ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கால்நடை, மீன் வளர்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க உதவிகளை வழங்குகிறது. நீலகிரி செம்மறியாடு இன ம் அழியும் சூழல் நிலவுகிறது. இவ்வகை ஆடுகள் தமிழகத்தில், 10 ஆயிரம் இருந்தன. ஆனால் தற்போது வெறும், 700 தா ன் உள்ளன. இந்த இனம் அழியாமல் காக்க, 76 லட்சம் ரூபாய் நி தியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டமும் நடப்பா ண்டு முதல் செயல்படுத்தப்படும்.
இதுதவிர கலப்பின காளைகளிலிருந்து உயிரணுக்கள் எடுத்து, புதிய கலப்பின காளைகளை உருவாக்க, இரண்டு கோடியே, இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பொதுவாக, வெள்ளாடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டிகளை ஈணும் தன்ø ம கொண்டது. ஆனால் செம்மறியாடுகள் ஒரு குட்டிக்கு மேல் ஈணாது. அதனால் செம்மறி ஆடுகளின் வீரிய தன்மையை கூட்டி, ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டிகளை ஈணும் திட்டத்துக்கு, இரண்டு கோடியே, 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு நல்லமுறையில் உள்ளதால், இத்திட்டத்தையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.