குற்றச்சாட்டு! பஸ் விட பரிந்துரை கடிதம் கொடுக்க மறுப்பதாக... இ.கம்யூ., புகாருக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மறுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுக்கோட்டை: புதிய வழிதடத்தில் பஸ் விடவேண்டும் என்ற, எங்களது கோரிக்கையை ஏற்க, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வைரமுத்து மறுத்துவிட்டதாக, இ.கம்யூ., கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பொன்னமராவதி செல்லவேண்டுமானால், புதுக்கோட்டை வந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்று பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அறந்தாங்கி செல்ல வேண்டுமானால், புதுக்கோட்டை வந்துதான் செல்லவேண்டியுள்ளது. இவை அப்பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கூடுதல் பயணச் செலச்துவையும், கால விரயத்தையும் ஏற்படுத்துகிறது.
இதை தவிர்க்கும் விதமாக, பொன்னமராவதியிலிருந்து, குழிபிறை, பனையப்பட்டி, லெம்பலக்குடி, அதிகாரிப்பட்டி, பூவம்பட்டி, முனசந்தை, ராயவரம், செங்கீரை, அரிமளம், தேனிப்பட்டி வழியாக, அறந்தாங்கிக்கு புதிய வழிதடம் உருவாக்கி, பஸ் விட வேண்டும் என, அரசு போக்குவரத்துக் கழகத்தை, இ.கம்யூ., கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதன் பின்னரும் கோரிக்கை நிறைவேறாததால், ஏமாற்றமடைந்த இ.கம்யூ., கட்சியினர், திருமயம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வைரமுத்து உதவியை நாடியுள்ளனர். இதற்கு அவர் மறுத்துவிட்டதாக இ.கம்யூ., கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இ.கம்யூ., கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொன்னமராவதியிலிருந்து குழிபிறை, லோணாவிலக்கு, ராயவரம், அரிமளம் வழியாக, அறந்தாங்கிக்கு புதிய வழித்தடம் உருவாக்கி பஸ் விடவேண்டும் என்ற, எங்களது கோரிக்கையை, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர். இதை கண்டித்தும், பஸ் விடக்கோரியும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டோம். இருந்தும் எங்களது கோரிக்கைகள் நிறைவேறாததால், திருமயம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வைரமுத்து உதவியை நாடினோம். அவரை மொபைல் ஃபோனில் தொடர்புகொண்டு, புதிய வழிதடத்தில் பஸ் இயக்க பரிந்துரை கடிதம் தருமாறு கேட்டோம். முடியாது என மறுத்துவிட்ட எம்.எல்.ஏ., ஃபோன் இணைப்பையும் துண்டித்துவிட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு குறித்து எம்.எல்.ஏ., வைரமுத்துவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
பொன்னமராவதியிலிருந்து குழிபிறை, ராயவரம், அரிமளம் வழியாக, அறந்தாங்கிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கவேண்டும் என, அரசு போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்துள்ளேன். பஸ் விட விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் இதே கோரிக்கைக்காக மீண்டும் ஒருமுறை இ.கம்யூ., கட்சியினரிடம் பரிந்துரை கடிதம் கொடுக்கவேண்டிய தேவையில்லை என்பதால் தான், கடிதம் கொடுக்க மறுத்துவிட்டேன். மற்றபடி ஃபோன் இணைப்பை துண்டிக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு பக்கம் எம்.எல்.ஏ., ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டதாக இ.கம்யூ., கட்சி குற்றஞ்சாட்ட, அதை திருமயம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மறுத்துள்ள விஷயம், புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்