DISTRICT NEWS | முகவரி இழக்கும் மகளிர் போலிஸ் ஸ்டேசன்கள் | Dinamalar

தமிழ்நாடு

முகவரி இழக்கும் மகளிர் போலிஸ் ஸ்டேசன்கள்

Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

நாகர்கோவில்:குமரி மாவட்ட மகளிர் காவல் நிலையங்கள் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. பெண் போலீஸ் போதிய அளவு இல்லாததால் பிரச்னைகளுக்கு புகார்
கொடுக்க பெண்கள் தயங்கி வருகின்றனர். டெல்லி முதல் குமரி வரை பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தலைதூக்கியுள்ள நேரமிது. இந்த நேரத்தில் காவல்து
றையின் பங்கு முக்கியமானது. அதே நேரம் போலீஸ் பற்றாக்குறையால் குற்ற நிகழ்வுகள் நடக்கிறது என்பதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குமரி மாவட்ட
மும் இதற்கு விதிவிலக்கல்ல.குமரி மாவட்டத்தில் 33 போலீஸ் ஸ்டேஷன்கள், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. எஸ்.பி., அலுவலகத்தில் துவங்கி
போலீஸ் ஸ்டேஷன்கள் வரை ஆள் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர். வழக்குகளை போதிய காலத்திற்குள் முடிக்க முடியாமலும், பதட்டமான நேரங்களில் உரிய
பாதுகாப்பு வழங்க முடியாமலும் போலீசார் திணறுவதை கடந்த இரு ஆண்டுகளாக பார்க்க முடிகிறது. குமரி மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் தற்போது
ரோந்து பணிகள், மற்றும் கலவரங்களை தூண்டுவோர் மீதான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இன்நிலையில் கன்னியாகுமரி, திருவட்டார் போலீஸ் ஸ்டேசன்
கள் பல மாதங்களாக இன்ஸ்பெக்டர் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அதைப்போல் போலீஸ் ஸ்டேஷன்களில் மட்டும் 15 சப் இன்ஸ்பெக்டர்கள் இல்லாத நிலை உள்ளது. தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் இடம் காலியாக உள்ளது. ஈத்தாமொழி, திருவட்டார், களியல், குலசேகரம், கீரிப்பாறை, அருமனை, ஆறுகாணி, கடையாலுமூடு, புதுக்கடை, நித்திரைவிளை, வெள்ளிச்சந்தை, மண்டைக்காடு, இரணியல் ஆகிய போலீஸ் ஸ்டேசன்களில் சப் இன்ஸ்பெக்டர்கள் இல்லாமல் வழக்குகளை சந்திக்கும் அவலம் உள்ளன. இந்த போலீஸ் லிமிட்டுகள் அதிக குற்ற நிகழ்வுகள் நடக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையம் தமிழக முதல்வர் ஜெ.,வால் துவங்கப்பட்ட பெருமையுடையது. இதைப்போல் தற்போது மகளிர் பாதுகாப்பு படையான, பெண்களின் சிறகுகள் மாவட்டத்தின் 4 டிவிஷன்களிலும் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையமானாலும் சரி... பெண்கள் பாதுகாப்பு படையானாலும் சரி... அவற்றை மாநிலத்திலே முதலாவது துவங்கிய பெருமை குமரி மாவட்டத்தையே சாரும்.குமரியை பொறுத்தவரை குளச்சல், குழித்துறை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் அரசின் நெறிமுறைப்படி இன்ஸ்பெக்டர், சப்
இன்ஸ்பெக்டர்கள், எஸ்.எஸ்.ஐ., ஏட்டு, கான்ஸ்டபிள் என்று 50 பேர் வரை மகளிர் போலீஸ்கள் வழக்குகளை கையாள இருக்க வேண்டும். ஆனால் தற்போது 15 பேர்கள்
மட்டுமே பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைப்போல் தான் குளச்சல், குழித்துறை, கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன.நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தினந்தோறும், 20க்கும் மேற்பட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு புகார்களும், தீர்வுகளும் கையாளப்பட்டு வருகின்றன. அதே நேரம் போதிய பெண் போலீசார் இல்லாததால் பல வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. கணவன், மனைவி பிரச்னை, வரதட்சணை கொடுமை, பாலியல் தொந்தரவு, ஈவ் டீசிங், ஆபாச பேச்சு போன்ற புகார்கள் அதிகம் வருகின்றன. அதே நேரம் இதுதொடர்பான மனம் திறந்த விளக்கத்திற்கும், கவுன்சிலிங்கிற்கும் வாய்ப்பில்லாததால், புகார் கொடுக்கவே பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். இருக்கும் சில பெண் போலீசார் இரு சிப்ட்களாக பணியாற்ற வேண்டியுள்ளதால், பணியில் போதிய கவனம் காட்டமுடியாத நிலை. ஸ்டேஷனில் உள்ள புகார்கள், பேச்சுவார்த்தை, கோர்ட் நடைமுறை, இதற்கிடையே கரைவேட்டி, சவுண்ட் பார்ட்டிக
ளின் கட்டபஞ்சாயத்துக்களையும் மறைமுகமாக கையாளவேண்டிய நிர்ப்பந்தத்தில் மகளிர் போலீசார் உள்ளனர்.இதை நிலைதான் கன்னியாகுமரி, குளச்சல், குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களிலும் உள்ளது. எனவே உண்மையான பாதிப்பை பெண்கள், மகளிர் போலீசில் சொல்லும் தைரியம் வருவதற்கு காவல்துறையின் நடவடிக்கை அவசியம். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஏ.ஆர். கேம்பில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் உள்ளனர். இவற்றில் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டேசன்களுக்கு டிரான்ஸ்பர் இன்றி அவதியடைவோரும் உள்ளனர். பிற மாவட்டங்களை பொறுத்தவரை 7 ஆண்டுக்கு மேல் ஏ.ஆர். கேம்பில் பெண் போலீசார் பணியாற்றினால் ஸ்டேசன் லிமிட்டிற்கு மாற்றும் நடைமுறை உள்ளது. 40 வயதுக்கு மேலும் ஏ.ஆர். கேம்பில் துப்பாக்கியை தூக்கி மார்ச்போட முடியாமல் பல பெண் போலீசார் அவதியடைவதை காணமுடிகிறது.

இவற்றில் திறமைமிக்க போலீசாரை மகளிர் போலீஸ் ஸ்டேசன்களுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வருகிறது. அனைத்து மகளிர் காவல்நிலைய குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட எஸ்.பி., மணிவண்ணனின் நடவடிக்கை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.பெயரளவிற்கு தானா... தகவல் உரிமை மையம்குமரி எஸ்.பி., அலுவலகத்தில் 9 உதவியாளர், 2 இளநிலை உதவியாளர், 3 அலுவலக உதவியாளர்கள் என்று 14 காலி பணியிடங்கள் உள்ளன. இதுதவிர அங்குள்ள தகவல் அறியும் உரிமை சட்ட மையத்தில் கிரைம் ஏ.டி.எஸ்.பி.,க்கான இடம் காலியாகவே உள்ளது. இதனால் எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கும் தகவல் உரிமை மையம்
பெயரளவிற்கு இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமை மையத்திற்கு அரசு தரப்பில் முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில், தமிழகத்தில்
பல இடங்களில் இதற்கான ஏ.டி.எஸ்.பி.க்கள் நியமிக்கப்படாத நிலை உள்ளது. அதே நேரம் இதற்கான நியமனத்திற்கு தனியாக உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை