திருநெல்வேலி:நெல்லை
மாவட்டத்தில் 8.40 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு இன்று (9ம் தேதி) முதல்
பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதற்காக முதல்வர் ஜெ., படம் பொறித்த பை,
கவர்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள
1,391 ரேஷன் கடைகளில் 1,128 கடைகள் கூட்டுறவு துறை மூலமும், 240 கடைகள்
நுகர்பொருள் வாணிப கழகம் மூலமும், 7 கடைகள் பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள்
மூலம், 16 கடைகள் சுய உதவி குழுக்கள் மூலமும் நடத்தப்படுகிறது.மாவட்டத்தில்
8.40 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளன. இக்கார்டுகளுக்கு அனைத்து
கடைகளிலும் உள்தாள் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில்
பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி பெறும் ரேஷன்
கார்டுகளுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய்
ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.இத்திட்டம்
இன்று (9ம் தேதி) துவக்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கடைகளில் உள் தாள்
இணைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு வழங்கும் வகையில் தமிழக முதல்வர் படம்
அச்சிட்ட பைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், 100
ரூபாய் ரொக்க பரிசுக்காகவும் முதல்வர் படம் அச்சிட்ட கவர்களும்
தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கல் பை,
கவர்கள் தயாரிக்க முடியாத நிலையில் தாலுகா வாரியாக இதற்கான அச்சகங்கள்
தேர்வு செய்யப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.ஒவ்வொரு
மாவட்டத்திலும் தேவைப்படும் பொங்கல் பைகள், கவர்கள் குறித்து கணக்கெடுப்பு
நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான பச்சரிசி,
சர்க்கரையும் போதுமான அளவில் இருப்பு வைக்கவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசு வீடு தேடி வரும் உதவி தொகை திட்டத்தை
அறிவித்து ஒரு சில மாநிலங்களில் அமல்படுத்தியுள்ளது. இதற்கு போட்டியாக
தற்போது பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கும் திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஆண்டில் பார்லிமென்ட்
தேர்தலை கருத்தில் கொண்டு அடுத்த பொங்கல் பண்டிகைக்கும் இத்திட்டத்தை
தொடர்ந்து நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.ரேஷன் கடைகள் மற்றும்
வி.ஏ.ஓ அலுவலகங்களில் விலையில்லா வேஷ்டி, சேலைகளும் வழங்கும் பணிகளும்
தீவிரமாக நடக்கின்றன. இதனால் ரேஷன் கடைகளில் அத்யாவசிய பொருட்கள் சப்ளை
செய்வதில் பிரச்னை எழாமல் உரிய நடவடிக்கைளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்
என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.