திருநெல்வேலி:நெல்லை
அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் விலையில்லா "லேப்டாப்' வழங்க வலியுறுத்தி
சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதர கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவது போல
தங்களுக்கும் விலையில்லா "லேப்டாப்' வழங்க வேண்டும் என சட்டக்கல்லூரி
மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை
அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து நேற்று கல்லூரி
முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். மீரான் தலைமை வகித்தார். மதன், ஆறுமுகம்,
கிருஷ்ணமூர்த்தி, நம்பிராஜன், வள்ளிநாயகம் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.பாளை., போலீஸ் உதவி கமிஷனர் ராஜமன்னார், தாசில்தார் மாணவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் மறியலை கைவிட மறுத்தனர். இதுதொடர்பாக
கலெக்டருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார்
தெரிவித்தார்.பின்னர் மாணவர்கள் மறியலை கைவிட்டனர். வாகனப்போக்குவரத்து
சீரானது. போராட்டக்குழு பிரதிநிதிகள் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர். அரசாணைப்படி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சரிடம் 12ம் தேதி தெரிவிப்பதாக சட்டக்கல்லூரி
முதல்வரும் மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.