DISTRICT NEWS | பார் ஊழியர் கொலை வழக்கு அம்பை கோர்ட்டில் இருவர் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பார் ஊழியர் கொலை வழக்கு அம்பை கோர்ட்டில் இருவர் சரண்

Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லையில் மதுக்கடை பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.நெல்லை அருகே அழகநேரி உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் முத்தையா(45). இவர் தச்சநல்லூர் மேலக்கரை டாஸ்மாக் மதுக்கடை பாரில் பணியாற்றினார்.
தச்சநல்லூர் பெட்ரோல் பங்க் எதிரே பேச்சியம்மன் கோயில் பின்புறம் ஆலமரத்தின் கீழ் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 4ம் தேதி முத்தையா கிடந்தார். அவர் உடல் அருகே சுமார் 6 கிலோ எடையுள்ள ரத்தக்கறை படிந்த கல் கிடந்தது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் தலைமையில் 2 தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடந்தது.இந்நிலையில், வழக்கு தொடர்பாக ராமையன்பட்டியை சேர்ந்த ஹரிச்சந்திரன்(26), வெள்ளப்பாண்டி(20) நேற்று அம்பாசமுத்திரம் ஜே.எம். கோர்ட்டில் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை