திருநெல்வேலி:நெல்லையில் ரோட்டில் நடந்து சென்ற வாட்ச்மேன் மோட்டார்பைக் மோதி இறந்தார்.சேரன்மகாதேவியை சேர்ந்த நாராயணன் மகன் ராஜமாணிக்கம்(43). தனியார் இன்ஜி., கல்லூரி வாட்ச்மேன். நேற்று ராஜமாணிக்கம் வண்ணார்பேட்டை பரணி நகர் விலக்கு ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார்பைக் மோதியது.படுகாயமடைந்த ராஜமாணிக்கம் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அவர் இறந்தார்.விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமலை விசாரணை நடத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.