மதுரை: மதுரையில் கேரள நகை வியாபாரியிடம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகி்ன்றனர். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நகை வியாபாரிகள் மதுரையில் உள்ள நகைகடைகளில் ஆர்டர் பெற்று தேவையான டிசைன்களை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ் மூலம் கேரள வியாபாரிகளான ஜோதி ரபேல்(40) மற்றும் வினோத்குமார்(35) ஆகியோர் இன்று அதிகாலையில் மதுரை வந்திறங்கினர். இவர்கள் கூடல் அழகர் பெருமாள் கோயில் வழியாக சுண்ணாம்புக்காரத் தெருவில் வந்து கொண்டிருந்தனர். இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் 6 பேர் கேரள வியாபாரிகளின் கண்களில் மிளகாய்பொடியை தூவிவிட்டு அவர்களிடம் இருந்த நான்கு கிலோ தங்கத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து கேரள நகை வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் மற்றும் நகையின் மதிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.மேலும் இந்த கொள்ளைச் சம்பவம் உண்மை தானா அல்லது நாடகமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.