One can't escape death and I-T department, says Amitabh Bachchan | மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013 | கருத்துகள் (17)
Advertisement
One can't, escape, death,I-T department, Amitabh Bachchan, மரணம், வருமான வரித்துறை,யாரும், தப்ப முடியாது, அமிதாப், பேட்டி

மும்பை : வருமான வரி பாக்கி வைத்திருப்போருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மரணம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டிடம் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது எனவும், இவை இரண்டும் தவிர்க்க முடியாதவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.


சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் :

2001-2002 ம் ஆண்டில் "கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வரிமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமிதாப் கூறியதாவது : வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரி்த்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


நீதிபதியாக அமிதாப் :

சுபேஷ் கபூர் இயக்கி உள்ள "ஜாலி எல்எல்பி" படத்தில் அமிதாப் தலைமை நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திய நீதித்துறை முறைகளை கிண்டல் செய்வது போன்று இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தை பற்றி கூறிய அமிதாப், இந்த படத்தில் தான் மிகவும் விரும்பி நடித்ததாகவும், இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


உண்மையின் பக்கம் :

சுப்ரீம் கோர்ட்டின் நோட்டீஸ் நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமிதாப் கூறியதாவது : நான் இதனை மோசமான அனுபவமாக கருதவில்லை; லண்டன் போஃபர்ஸ் ஊழல் வழக்கிலும் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதும் என் நினைவில் உள்ளது; என்னிடம் உண்மை என்ற ஆயுதம் உள்ளது; அதனைக் கொண்டு நான் போராடி வருகிறேன்; நான் உண்மையை மட்டுமே பேசி வருகிறேன்; உண்மையின் பக்கம் இருப்பதால் நான் நிச்சயம் வழக்கில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அமிதாப் தெரிவித்துள்ளார். மேலும் டில்லியில் கடந்த மாதம் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமிதாப், மற்றவர்களை கை நீட்டி குற்றம் சொல்வதற்கு பதிலாக நாம் ஒவ்வொருவரும் முதலில் தங்களை தாங்களே ஆய்வு செய்து திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Er. S. ARJUNAN - Doha,கத்தார்
09-ஜன-201314:37:53 IST Report Abuse
Er. S. ARJUNAN நாட்டில் உள்ள பெரும் புள்ளிகளின் வருமானவரி பாக்கியை வசூல் செய்தால் இரண்டு பட்ஜெட் போடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
09-ஜன-201314:30:52 IST Report Abuse
Rangarajan Pg வருமான வரி கட்ட வேண்டியது வரி விலக்கு வரம்புக்கு மீறி சம்பாதிப்பவர்களின் கடமை. ஒரு நல்ல குடிமகன் அதை செவ்வனே கட்டுவான். ஆனால் இவர் நீதியை மதிக்கிறேன் என்கிறார், நேர்மையானவர் போல பேசுகிறார். உண்மைக்கு கட்டுப்பட்டவர் போல காட்டி கொள்கிறார். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்னாலே இருந்தே எதற்கு வரிகட்டாமல் இருந்து வருகிறார். இவர் வரி கட்டுவதற்கு SUPREME COURT நோட்டீஸ் அனுப்பினால் தான் கட்டுவாரா என்ன? ""நான் ஒரு மூத்த குடிமகன், எனக்கு வருமான வரி விலக்கு வேண்டும்"" என்று மனு செய்தாலும் செய்வார்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Doha,கத்தார்
09-ஜன-201314:13:19 IST Report Abuse
Tamilan சினிமா நடிகர்கள் எல்லாம் உண்மையான வருமானத்தை தெரிவித்து, சரியான வரியை கட்டினால் வருமான வரி துறைக்கு பயப்பட வேண்டியது இல்லை. உண்மையான வருமானத்தை எமற்றுவர்களும், வரி எய்ப்பு செய்வபாவர்கள் தான், வருமான வரித்துறைக்கு பயப்படவேண்டும். ஆனால் மரண பயம் யாரையும் விட்டு வைப்பதில்லை என்பது உண்மை தான்.
Rate this:
Share this comment
Cancel
Deva - chennai,இந்தியா
09-ஜன-201312:53:51 IST Report Abuse
Deva எங்கள மாறி மாச சம்பளம் வாங்குற ஆளுங்களுக்கு மட்டும் தான் Inida ல Income tax
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
09-ஜன-201312:19:33 IST Report Abuse
JALRA JAYRAMAN ஏழை பணக்காரன் இவர்களிடத்தில் உள்ள பொருளாதார ஏற்ற தாழ்வுகளை நீக்க அரசு மேற்கொள்ளும் ஒரு முயற்சி தான் வருமான வரி. இதை கட்ட அவர்க்கு கசக்குது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிக்கொண்டே போனால் நாட்டில் அமைதி இருக்காது. அவர்களை பார்த்து தனக்கு இல்லையே என சிலர் சும்மா இருக்ககூடும். ஆனால் பலர் அதை எப்படியாவது அடைய முயற்சி மேற்கொள்வார்கள், அவை கொலை, கொள்ளை, போன்றவை பெருக வழி செய்யும், ஏற்ற தாழ்வு என்பது இயற்கையின் நீதி, அதை குறைத்தால் தான் எதிர்பார்ப்பு அதிகம் உள்ள இன்றைய நிலையில் அமைதி இருக்கும். இவரின் பேச்சில் கிண்டல் தான் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
09-ஜன-201312:06:49 IST Report Abuse
Yoga Kannan தமிழனுக்கு எப்போதுமே... எதை சொல்ல வருகின்றோம் என்பதை விட்டு விட்டு ...தன் சிந்தனை எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்வது... திருந்து ....அதனால் தான் வீதிக்கு வந்து பாவப்பட்ட நடிகர்கள் போராடுகிறார்கள் ... நீ தான் எதிர்ப்பை காட்டாமல் மறந்துவிடுவாயே .....
Rate this:
Share this comment
Cancel
VTVIN - mahchester,யுனைடெட் கிங்டம்
09-ஜன-201311:43:40 IST Report Abuse
VTVIN Tax department should impose 500% (yes it is five hundred percenttage only) fine for these kind of cheaters. Since he is famous he cannot cheat the govt. Many of the actors and actress never pays tax. A new rule should be made once they find a actor not payed tax they should seize all his money and put him jail for ever. then only these cheaters will change
Rate this:
Share this comment
Cancel
meekannan - Chennai,இந்தியா
09-ஜன-201310:58:47 IST Report Abuse
meekannan இவரன் குரல் எடுப்பாக இல்லை என்று இவரை நிராகரித்தது நம் ஆல் இந்திய ரேடியோ (AIR) அதன் பின்பு சினிமாவில் நுழைந்து இந்திய சூப்பர்ஸ்டார் நிலை அடைந்தார். அதன் பின் எந்த காரணத்திற்காக இவரை நிராகரித்த ஆல் இந்திய ரேடியோ இவருடைய குரலுக்காக தவம் இருந்தது என்பது வரலாறு. சாதனை செய்த இவர் வருமான வரி கட்டுவதே நல்லது என்பது அனைவரின் அவா.
Rate this:
Share this comment
Cancel
உரல்பட்டி ஊமையன் - தமிழ்நாடு ,இந்தியா
09-ஜன-201310:51:47 IST Report Abuse
 உரல்பட்டி ஊமையன் மாசம் பூரா வேலைக்கு போனா 15,000/- சம்பாரிக்கிறோம் .....இதுக்கும் UG ..PG ன்னு படிச்சவங்க ....ஒரு படத்துக்கு பலகோடி சம்பளமா வாங்கறீங்க ....கார் ..பங்களா ...ன்னு வசதியா இருக்கீங்க .....வருமான வரி கட்டினா என்ன தப்பு ???
Rate this:
Share this comment
Cancel
sudeesh - coimbatore,இந்தியா
09-ஜன-201310:39:45 IST Report Abuse
sudeesh பாவம்...இவங்க ஏழைகள்..வாங்க ஏழைங்களா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை