புதுடில்லி: காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாக்., விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இதனிடையே பாகிஸ்தான் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி உள்ளது. இங்கு நேற்று இந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாக்., பகுதியிலிருந்து அத்துமீறி நுழைந்த, அந்நாட்டு ராணுவத்தினர் சிலர், இந்திய வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ஹேமராஜ் மற்றும் சுதாகர் சிங் என்ற இரு வீரர்கள் கொல்லப்பட்டனர்; மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு ராணுவ வீரர்களின் தலையையும் துண்டித்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவற்றில், ஒருவரின் தலையை தங்களுடன் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட ராணுவ அதிகாரிகள், வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது தொடர்பாக, எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இரு நாட்டு ராணுவ நடவடிக்கைக்கான டைரக்டர் ஜெனரல்கள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியா சார்பில் கடும் எச்சரிக்கை விடுப்படும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்பு சல்மான் பஷீர் ஆஜரானார். இதன் பின்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயல் சர்வதேச விதிகளை மீறியது. இது போன்ற செயல்கள் திரும்பி நடைபெறாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, பாகிஸ்தானின் செயல் மனிதத்தன்மையற்ற செயல். இந்திய வீரர்கள் மீது கொடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவை கோபமூட்ட செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என கூறினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இந்த செயலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது பற்றி பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும். சம்பவம் குறித்து முழு விபரங்களை சேகரித்த பின்னர், இந்தியாவின் நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இந்தியாவின் நடவடிக்கை அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும் என கூறினார்.
இந்தியா ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது. கடும் பனிமூட்டம் ஆகியவற்றை சாதகமாக பயன்படுத்தி, இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மோதல் நடந்துள்ளது என கூறியுள்ளது.
இன்று மதியம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தாஸ் ராணுவத்தினர் கொன்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செயல், இருநாட்டு உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையை பாதிக்கும் என கூறியுள்ளார்.
இதனிடையே இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஞாயிறு அன்று, பாகிஸ்தான் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை உலக நாடுகளிடமிருந்து மறைக்கவே இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது , வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இந்த செயல் இந்திய ராணுவத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதி உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், இதற்கு பாகிஸ்தான் அலச்சியம் காட்டும் பட்சத்தில் போர்தொடுக்க ஒரு கணம் கூட தயங்காமல் முடிவு எடுக்க வேண்டும்
அதான் இது போன்ற செயல்கள் திரும்பி நடைபெறாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தபடும் என்று சொல்லிட்டான்களே அப்புறம் ஏன் எல்லாரும் டென்ஷன் ஆவுரிங்க. அப்புறம் பாகிஸ்தான் காரங்க கிர்கெட் ஆட வரமாட்டேன்னு சொல்லிட போறாங்க. நம்மளும் டிக்கெட் வாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி போய் நிக்க வேண்டிய வேலை இல்லாம போய்ட போகுது .
நாட்டின் ராணுவம்பலமாக உள்ளது என்று சொல்லும்மத்தியஅரசு ஏன்கண்டனம் சொல்லத்தான் உங்களுக்கு தெரியுமா ? பதில் தாக்குதல் நடத்த தெரியாதா? இல்லை என்றால் உங்களுக்கு அந்த தைரியம் இல்லையா ? மோடி போன்ற திறமையானவர்களிடம் நாட்டைஒப்படைத்து விட்டு நீங்கள் உங்கள் நாட்டை பார்த்து கிளம்புங்கள் , ராணுவவீரர்களை அழிக்காதிர்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.