புதுடில்லி: ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ரயில் கட்டண உயர்வு ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார்.
மத்திய ரயில்வேத்துறை மத்தியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கட்சிகள் வசம் இருந்து வந்தது. இதனால் ரயில்வே கட்டணத்தை உயர்த்தவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணத்தை, ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி உயர்த்தினார். இதனால் அவரது கட்சி தலைவர் மம்தா அதிருப்தியடைந்தார். ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும என்று விடாப்பிடியாக இருந்தார். இதனால் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் திரிணமுல் கட்சியை சேர்ந்தவரே ரயில்வே அமைச்சராக பதவியேற்றார்.இதன் பின்னர் ரயில்வே அமைச்சர் பதவி காங்கிரஸ் வசம் வந்தது. இதனையடுத்து ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படும் என அமைச்சர்கள் கூறி வந்தனர். எப்போது உயர்த்தப்படும் என கூறப்படவில்லை. ரயில்வே துறை பயணிகள் கட்டண பிரிவில் ரூ.24,000 கோடி நஷ்டத்தை சந்தித்து வருவதாக மத்திய அரசு கூறி வந்தது.
இந்நிலையில் ரயில்வே கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரயில்வே கட்டணங்கள் குறித்து அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரயில் கட்டணங்கள் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தற்போது ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கருத்தில் கொண்டும், 6வது சம்பள கமிஷன் காரணமாகவும் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது. ரயில் கட்டண உயர்வு மூலம் 12 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். இந்த கட்டண உயர்வு ஜனவரி 21ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது எனவும் கூறினார்.
இதன்படி, ஏசி முதல் வகுப்புக்கான ரயில் கட்டணம் கி.மீ., க்கு 10 பைசாவும், இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 2 பைசாவும் உயர்த்தப்படுகிறது. மேலும், தூங்கும் வசதி கொண்ட ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 6 பைசாவும், ஏசி இருக்கை வசதி கொண்ட ரயிலுக்கான கட்டணம் கி.மீ.,க்கு 10 பைசாவும், ஏசி மூன்றடுக்கு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 10 பைசாவும், ஏசி இரண்டடுக்கு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 6 பைசாவும், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கிலோ மீட்டருக்கு 4 பைசாவும் உயர்த்தப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நான் கடந்த 35 வருடங்களாக ரயிலில் பயணம் செய்து வருகிறேன் Kolkotta & Guwahati மார்கமாக .நான் பணிவோடு கட்டு கொள்வது என்ன வென்றால் ஒரு முறையாவது அமைச்சர் பெருமகன் அதில் பயணம் செய்துவிட்டு விலை உயர்த்தல்லாம் NO water 1 No TT heavy crowd in second class sleeper compartment and above all No water in Latrine this is the true story of Railways and not a single complaint Nobody bothers to lodge a complain because there is no body to provide you the complaint book1
ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் ரயில்வே நிர்வாகம் நடத்த முடியாது .ஆயினும் உயர்த்தப்பட்ட அளவு ,மற்றும் உயர்த்தப்படும் நேரம் நியாயமற்றது.ரயில்வே பட்ஜெட் சமர்பிக்க ஒரே மாதம் இருக்கும் நிலையில் மறைமுகமாக ஜனநாயக முறைப்படி பார்லிமெண்டில் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தை இப்படி தந்தோன்றிதனமாகதி.மு.க வையும் உள்ளடக்கிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசு அறிவிப்பு மூலம் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று.இதற்கு தி.மு.க என்ன சப்பகட்டு கட்டப்போகிறது என்று பாப்போம்.
அட்ரா அட்ரா சக்க சக்க காங்கிரஸ் கொடுக்கிற பொங்கல் போனஸ் அற்புதம். அய்யா புண்ணியவான்களே முதலில் ரயில் பயணத்தின் தரத்தை உயர்த்துங்கள். முக்கியமாக சுத்தம் சுகாதாரம் என்று பிதற்றி திரியும் குலாம் நபி ஆசாத் அவர்களை ஒரு முறை நமது இரண்டாம் வகுப்பு கழிப்பறையில் ஒரு முறை சென்று சுத்தம் என்பது "சுத்தமாக இல்லாததை" பார்க்க சொல்லவும். பணம் கொடுக்கிறோம் அல்லவா? we are rights to tell about our requirements its damn sure 2014 congress results will be washout in total tamilnadu .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.