Jayalalitha speech in function | விவசாயிகளின் நஷ்டத்தை அரசு ஈடு செய்யும்: முதல்வர் ஜெயலலிதா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளின் நஷ்டத்தை அரசு ஈடு செய்யும்: முதல்வர் ஜெயலலிதா

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013 | கருத்துகள் (11)
Advertisement

ஊட்டி: டெல்டா மாவட்ட விவசாயிகளின் நஷ்டத்தை அரசு ஈடு செய்யும் என, சிறப்பு பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

பொங்கலை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.100 உள்ளிட்ட 160 மதிப்பிலான பொங்கல் பரிசு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம், கொடநாடு ரேஷன் கடையில், இன்று துவக்கி வைத்தார்.

திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் பேசுகையில், காவரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய அனைத்து நஷ்டத்தை அரசு ஈடு செய்யும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே எனது கொள்கை. தமிழக மக்களுக்கு எந்தவிதமான குறையும் இருக்கக்கூடாது என்பது அரசின் நோக்கம். பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என கூறினார்.

இந்த விழாவில் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்க வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SARAN - Edinburgh,யுனைடெட் கிங்டம்
09-ஜன-201321:22:33 IST Report Abuse
SARAN என்னமோ யாரோ எழுதி கொடுத்தத அப்படியே சினிமால டயலாக் பேசுற மாதிரி பேசிடு போய்டாதீங்க. விவசாயி தான் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணம்னு மறந்துடாதீங்க. நீங்க கொடுக்குற இலவசம் ஒரு நாளைக்குதான். அப்பறம் நாங்க உழுதா தான் எங்களுக்கு கஞ்சி. ஏதாவது பார்த்து பண்ணுங்க, சும்மா 1000 இல்ல 2000 கொடுத்தா இவங்க மூடிகிட்டு போயுடுவாங்கனு நினைசுபுடாதீங்க, அடுத்தது கலைஞர் வந்துடுவார், அவரு வந்தாலும் ஏதும் செய்ய மாட்டரு இருந்தாலும் எங்களுக்கு வேற வழி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
kalai1972 - Chennai,இந்தியா
09-ஜன-201320:48:42 IST Report Abuse
kalai1972 கொடநாடு க்கு தலைமை செயலகத்தை மாத்தியதுக்கு பதிலா டெல்டா மாவட்டத்துக்கு மாத்தி இருந்தா விவசாயிகளுக்கு நல்லது உடனே நடந்திருக்கும்
Rate this:
Share this comment
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
10-ஜன-201301:59:18 IST Report Abuse
B Sivanesanஎப்படி......
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-201319:30:04 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... அம்மாவின் கருணையே கருணை.../
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜன-201320:53:58 IST Report Abuse
தமிழ்வேல் பொங்கலுக்கு கருணை கிழங்கு தேவைதான் ... ஆமா ...அது ஏன் அவுங்க எல்லாம் எதையோ நோண்டிகிட்டு நிக்கிறாங்க ?...
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
09-ஜன-201319:21:01 IST Report Abuse
KMP சிறப்பான வரவேற்ப்பு ... எதற்கு ??
Rate this:
Share this comment
Cancel
mangaidaasan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-201318:54:02 IST Report Abuse
mangaidaasan வார்த்தைகள் அனைத்தும் கேட்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால், அதனை எப்போது நடைமுறை படுத்தப்போகிறீர்கள்? மற்றும், மத்திய அரசையே இன்னும் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது சரியல்ல. காரணம், தி.மு.க. அதனுடன் கூட்டணி வைத்துள்ளது அவர்களை மீறி காங்கிரஸ் ஒன்றும் செய்ய போவதில்லை என் தெரிந்தும், நீங்கள் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் செய்யாமல் விட்டீர்கள்?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜன-201320:54:54 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை.....
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
09-ஜன-201318:42:58 IST Report Abuse
JALRA JAYRAMAN விவசாயிகளின் நஷ்டம் ஈடுசெயயபடுவது நல்ல செய்தி, விவசாய வேலை செய்ய ஆட்கள் இல்லை, காவேரி தண்ணீர் மிகவும் கடினம், இந்த சூழ்நிலையில் விவசாயம் செய்பவர்களை ஊக்குவிப்பது நாட்டுக்கு நல்லுது.
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
09-ஜன-201317:38:04 IST Report Abuse
ANBE VAA J.P. உங்களின் 16 மணி நேர" செயற்கை" மின்வெட்டால் ,நொடிந்து போயிருக்கும் எங்களை போன்ற தொழில் நிறுவனங்களின் நஷ்டத்தை யார் ஈடு செய்வார்கள்? இதனால் தற்கொலை செய்து கொண்ட குறுந்தொழில் முதலாளிகளின் குடும்பத்துக்கு அவர்களின் இழப்பை யார் ஈடு செய்வார்கள்?
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
09-ஜன-201317:10:26 IST Report Abuse
R.Saminathan தமிழ் நாட்டு மக்களுக்காக உழைக்கும் இன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர்..,சரியான முறையில் தமிழகத்தை கொண்டு செல்கிறார்..மின்சாரத்தையும் கூடிய சீக்கிரம் கொண்டு வருவார் என்று நம்புகிறேன்,,.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை