கொட்டாம்பட்டி:மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே போலி ஆவணங்கள், ரப்பர் ஸ்டாம்ப்புகள் தயாரித்து அனுமதியின்றி குவாரி நடத்திய ஊராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார்.கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலவளவைச் சேர்ந்த தங்கம் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு அய்யாபட்டியில் சர்வே எண் 593ல் உடைகல் மற்றும் ஜல்லி குவாரி நடத்த அரசின் அனுமதி பெற்று குவாரி நடத்தி வந்தார். செப்டம்பர் 2013 வரை ஐந்து ஆண்டுகளுக்கு உரிமம் எடுத்திருந்த நிலையில் ஏப்ரல் 2012ல் குவாரி நடத்துவதை தங்கம் திடீரென நிறுத்தினார். அவரின் உறவினர் கருங்காலக்குடியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் என்ற கெயின், 62. இவர், தங்கம் விட்டுச் சென்ற குவாரியில், தனது பெயரில், குவாரி தொழில் செய்ய உரிமம் பெற்றது போன்று போலி ஆவணங்கள் தயாரித்தும், குவாரியிலிருந்து உடைகல், ஜல்லி கொண்டு செல்லும் லாரிகள், டிராக்டர்களுக்கு நடைச் சீட்டுகள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளின் கையெழுத்துடன் கூடிய ரப்பர் ஸ்டாம்ப்புகள் ஆகியவற்றை போலியாக தயாரித்தும் குவாரி நடத்தி வந்தார்.
இதுகுறித்து, மதுரை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்த தகவலையடுத்து கிருஷ்ணன் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினார் புகார் அளித்தார்.இதையடுத்து, கிருஷ்ணனை கைது செய்த கொட்டாம்பட்டி போலீசார் அவரிடமிருந்த ஆவணங்கள், ரப்பர் ஸ்டாம்ப்புகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.