திண்டுக்கல்: தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது திண்டுக்கல் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஜன., 23க்கு ஒத்திவைக்கப்பட்டது. 2012 ஆக., 1 ல் திண்டுக்கல்லில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, அரசு வக்கீல் ஜெயபாலன் திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுந்தரக்குமார், ஜன. 9 ல், விஜயகாந்த் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக தே.மு.தி.க., வக்கீல்கள் லட்சுமணன், பாக்கியசெல்வராஜ், கார்த்திக், அரசக்குமார், சரவணன் ஆகியோர் மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு, விஜயகாந்த் சார்பில் மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் நேரில் ஆஜராக இரண்டு வார காலத்திற்கு அவகாசம் அளிக்குமாறு கேட்டனர். இதையடுத்து நீதிபதி பாலசுந்தரக்குமார் வழக்கு விசாரணையை ஜன., 23 க்கு ஒத்தி வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.