சென்னை: "வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வால், கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக, வேதாரண்யத்தில் 17 செ.மீ., மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடியற்காலையில் கடும் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் அடித்தன.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "காற்றழுத்த தாழ்வு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், வடக்கு உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னை நகரில் விடியற்காலை லேசான பனிப்பொழிவு நீடிக்கும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.