திரிசூலம் : சென்னையில் இருந்து, குவைத் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், விமானம் மீண்டும்
சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னையில்
இருந்து, நேற்று காலை 7:00 மணிக்கு, 216 பயணிகள், எட்டு விமான
பணியாளர்களுடன், குவைத் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில்
பறந்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த உத்தரவை அடுத்து, சென்னை விமான நிலையத்தில், காலை 8:10 மணிக்கு,
விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.
பயணிகள்
அனைவரும் வெளியேற்றப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
பழுது சரி செய்யப்பட்ட பின், அதே விமானத்தில், மதியம் 12:40 மணிக்கு,
பயணிகள் குவைத் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.