சென்னை : மழை குறைந்து விட்டதாலும், விரைவில் மீன்பிடி தடை காலம் வர உள்ளதாலும், மீன்களின் விலை ஏறுமுகத்தில் செல்ல துவங்கியுள்ளது.
கடலில்
மீன்வளத்தை பெருக்க, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல், 45 நாள்
மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும். தற்போது, கடலில் மீன் வளம்
குறைந்துள்ளதால், எதிர்பார்த்ததை விட குறைந்தளவு மீன்களே கடலில்
கிடைக்கின்றன. இதனால், கடந்த வாரம் முதலே சந்தைகளில் மீன்களின் விலை உயர
துவங்கியுள்ளது.
சென்னை வாசிகள் பலர், அய்யப்ப விரதத்தையும் முடித்து
விட்டனர். மாட்டு பொங்கல் பண்டிகையும் வர உள்ளது. இதனால் மீன் தேவை
அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் காசிமேடு மொத்த விலை சந்தையில்,
வஞ்சிரம் மற்றும் வவ்வால் உள்ளிட்ட மீன்கள், கிலோ 500 முதல் 700 ரூபாய்
வரை விற்பனையாகின.
இறால் ஒரு கிலோ, 100 முதல் 200 ரூபாய் வரை
விற்பனையானது. சீலா, கொடுவா, கெழுத்தி, சங்கரா, காரப்பொடி, பன்னா, நாக்கு
மற்றும் வாளை போன்ற மீன்களும் விற்பனைக்கு குறைந்தளவே இருந்தன. இதனால்,
அவற்றின் விலையும் அதிகமாகவே இருந்தது.
இரண்டடி நீளம் கொண்ட சீலா மீன்
300 முதல் 400 ரூபாய் வரை விற்பனையானது. வரத்து குறைவு காரணமாக
ஏற்றுமதிக்கு செல்லும் வவ்வால், திருக்கை
மற்றும் கடமா உள்ளிட்ட மீன் வகைகளுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.