சென்னை: ""அகில இந்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள, 48 மணி நேர பொது வேலை நிறுத்தத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்க வேண்டும்,'' என, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவருமான, குருதாஸ் தாஸ்குப்தா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: விலைவாசி உயர்வு உள்ளிட்ட, 11 கோரிக்கைகைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம், 20, 21ம் தேதிகளில், அரசியல் வேறுபாடுகளை கடந்து, நாட்டில் முதல்முறையாக, அனைத்துத் தொழிற்சங்கங்களும், 48 மணிநேர வேலைநிறுத்ததில் ஈடுபடுகின்றன. இதற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளிக்க வேண்டும். அரசு நேரடியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியாது என்றாலும், தார்மீக ஆதரவை, ஜெயலலிதா அளிக்கவேண்டும். தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருவதை, கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டிக்கின்றன. குறிப்பாக, கடும் மின்வெட்டில் தவிக்கும் தமிழகத்துக்கு, மின் பற்றாக்குறையைப் போக்க, சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து நடக்கும், பொது வேலைநிறுத்தத்துக்கு, ஜெயலலிதா தார்மீக ஆதரவு அளிக்கவேண்டும். இவ்வாறு, குருதாஸ் தாஸ்குப்தா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடும் மின்வெட்டில் தவிக்கும் தமிழகத்தை காப்பாற்ற மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் தர மறுப்பது, கூடங்குளம் மின்சாரத்தை முழுமையாக தர மறுப்பது மற்றும் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை புறக்கணித்து மாற்றந்தாய் மனப்பான்மை உடன் செயல்பட்டு வரும் மதிய அரசை கண்டிக்கும் வகையிலும் பொதுவேலை நிறுத்தத்திற்கு தமிழக அரசு தார்மீக ஆதரவு அளிக்கவேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.