மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆறு பேர் கொண்ட கும்பல், கேரள வியாபாரிகள் இருவர் மீது, மிளகாய் பொடி தூவி, 4.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இவர்களை பிடிக்க, ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர், வினோத் குமார், 32. மதுரை உட்பட, தென் மாவட்டங்களில், "ஆர்டர்' எடுத்து, நகை செய்து கொடுப்பது வழக்கம். இதற்காகவே, இரு ஆண்டுகளாக மதுரையில், வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தார். ஆறு மாதங்களுக்கு முன், திருச்சூருக்கு குடும்பத்தை இடமாற்றினார்; ஆனாலும், தொழிலுக்காக வீட்டை காலி செய்யவில்லை. நேற்று அதிகாலை, 5:50 மணிக்கு, திருச்சூரிலிருந்து தனியார் ஆம்னி பஸ்சில், வினோத் குமாரும், சக ஊழியர் ஜோதி ரபேல், 40, என்பவரும், 4.50 கிலோ நகைகளுடன் மதுரை வந்தனர். பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இறங்கி, சுண்ணாம்புகாரத் தெருவில் நுழைந்தனர். அப்போது, ஆட்டோவில் காத்திருந்த ஒருவர், மிளகாய் பொடியை தூவி, வினோத்குமாரை தாக்க, பின்தொடர்ந்து வந்த, ஐந்து பேர், நகை பையை பறித்து, அம்பாசிடர் காரில் தப்பினர். துணைகமிஷனர்கள் விசாரணை நடத்தினர். கொள்ளையரை பிடிக்க, ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.