வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதே ஆண்டில் முதல் வகுப்பு கட்டணம் மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளது... 30 km வரை 500 ரூபாய் இருந்த முதல் வகுப்பு கட்டணம் 555 மற்றும் 570 வரை முன்பே இரண்டுமுறை உயர்தபட்டுவிட்டது... இனி அது 600 ரூபாயாக உயரக்கூடும்.. புறநகர் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டி கவலை அளிக்கும் நிலையிலேயே உள்ளது... அதிலும் குறிப்பாக சென்னை- அரக்கோணம் வழி மின்சார ரயில்களில் பேருக்குதான் முதல் வகுப்பு பெட்டி.... புறா பொந்து கூட பெரியதாக இருக்கும்... மேலும் இரண்டாம் வகுப்பு சீசன் ஹோல்டேர்ஸ் கூட ரயில்வே யூனியன் பெயர் வெளியில் தெரியும்படி வைத்து பயணம் செய்வர்... இவர்கள் பயணம் செய்வதோடு அல்லாமல் இவர்களின் நண்பர்களையும் அருகில் அமர்திககொள்வர்... டிக்கெட் பரிசோதகர் இவர்களை கண்டுகொள்ளாமல் யாராவது வடஇந்திய நபர்களையோ, தெலுங்கு மற்றும் வெளிமாநில நபர்களை பிடிப்பார்...தெரிந்தே தினமும் பயணம் செய்பவர் இருக்க தெரியாமல் பயணம் செய்பவரை பிடித்து வைத்துகொண்டு இவர்கள் செய்யும் அலப்பரை இருக்கிறதே அப்பப்பா... இன்னொரு கூத்து இரவு நேரங்களில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் நபர்களில் பலபேர் குடித்துவிட்டு பயணம் செய்கின்றனர்.... இந்த குடிகாரர்களின் அட்டுழியம் தாங்க முடியாததாக உள்ளது.... இரவு நேரத்தில் டிக்கெட் பரிதோதனை செய்பவர்கள் வருவதே இல்லை... இப்பொழுதெல்லாம் முதல் வகுப்பில் பயணம் செய்வதே ஒரு பெரிய தண்டனை ... இதில் கட்டண உயர்வு வேற... கடவுளே....
மரியா அல்போன்சே பாண்டியன் 22 தேதிக்கு பிறகு ஒரு 500 கி மீ தூரம் sleeper வகுப்பில் சென்று வரட்டும் தெரியும். அது சரி ரயில் கட்டண உயர்வு செய்தியை முழுமையாக படிக்கவில்லையா .பன்சாலுக்கு உதவியாளர் மாதிரி கடிதங்களை எழுதி இருக்கிறார் .மதுரையிலிருந்து இரண்டாம் வகுப்பு உறங்கும் வசதி பெட்டியில் செல்பவர் சுமார் ரூ.150 அதிகம் கொடுத்துசெல்லவேண்டும் என்பதை அறிவாரா.
ரயில் கட்டண உயர்வை மட்டும் உடனே திரும்பப் பெறவேண்டும் என்று கூக்குரலிடுகிற நம்ம ஜெ., பஸ் கட்டண உயர்வை அத்தனை பேர்கள் போர்க்கொடி தூக்கியும் அசைந்து கொடுக்காதது முரணாகப் படுகிறது... தன்னுடைய கட்டுப்பாட்டில் பிடிவாதமாக ஒரு காரியத்தை செய்கிற நமது முதலமைச்சர், மத்திய அரசின் ஓர் நடவடிக்கைக்காக எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களை என்னவோ செயற்கையாக உணர வைக்கிறது..
கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுக்கு கொஞ்சம் என்று கட்டணத்தை அதிகரித்து இருந்தால் மக்களுக்கும் பாரம் இல்லாமல் இருந்து இருக்கும் . அதை விட்டு விட்டு வாக்கு அரசியலுக்காக சுத்தமாக கட்டணத்தை கூட்டாமலே விட்டு விட்டார்கள். இந்த பத்து ஆண்டுகளில் டீசல் மற்றும் மின்சார கட்டணம் எத்தனை உயந்து இருக்கிறது? ரயில்வே ஊழியர்களுக்கு ஆறாம் ஊதிய குழு மற்றும் எத்தனை முறை ஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது? இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? அவர்களுக்கு கொடுக்க பயணிகளின் அடிப்படை வசதிகளிலேயே கை வைத்து விட்டார்கள். நாங்கள் உங்களை நியாயமான கட்டண உயர்வு வேண்டாம் என்று சொல்ல வில்லை. அய்யா .. வாங்குகிற காசுக்கு நல்ல நியாயமான வசதி செய்து தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எலிகளும் கரப்பான் பூச்சிகளும் ஏ சி கோச்சையே விட்டு வைக்கத பொது மற்ற சாதாரண வகுப்பை பற்றி கேட்க வேண்டுமா?
இதேபோல் தான் தமிழ் நாட்டிலும் பல வருடங்களுக்கு பிறகு பஸ் கட்டணத்தை உயர்த்திய போது வானத்திற்கும் ,பூமிக்கும் எகிறி குதித்த மரியா அல்போன்ஸ் போன்ற யோக்கியர்கள் இன்று பச்சோந்திகளை போன்று நொண்டி சாக்கு சொல்கிறார்கள். கேட்டால் இந்த உயர்வு பஸ் கட்டணத்தை போல் உயரவில்லை என மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்கள். 50 பேர் பயணம் செய்ய கூடிய பஸ்சும், பல ஆயிர கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய கூடிய ரயிலும் ஒன்றா. உண்மையில் இவர்கள் மற்றவர்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்களா அல்லது இவர்கள் எப்போவுமே இப்படிதானா

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.