புதுடில்லி,: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து சென்ற, பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர நடவடிக்கையை, "மனிதாபிமானற்ற செயல்' என, மத்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது; பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்தும், கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீரில் மாநிலத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனாலும், பாகிஸ்தான் ராணுவத்தினர், அவ்வப்போது, இந்திய ராணுவ வீரர்கள் மீது, விதிமுறைகளை மீறி, தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது.நேற்று முன்தினம், காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
இந்திய எல்லைக்குள், 100 மீட்டர் தூரம் வரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி, இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்ற, இரண்டு இந்திய வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இதில், ஒருவரின் தலையை, பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்தனர். இந்த தாக்குதலில், மேலும் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களின் ஆயுதங்களையும் எடுத்துச் சென்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின், இந்த இரக்கமற்ற நடவடிக்கை, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியையும், எல்லை பகுதியில், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.இதையடுத்து, பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீருக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி, அவரை நேரில் வரவழைத்தது. அவரிடம், பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர செயலுக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் குறித்து, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது:போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்றும் இரக்கமில்லாமல், இந்திய ராணுவ வீரரின், தலையை துண்டித்துள்ளனர். இது, மனிதாபிமானமற்ற செயல்.இந்த விவகாரத்தில், இந்திய அரசின் அதிருப்தியையும், கவலையையும், மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளோம். நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். இது தொடர்பாக, பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியும், எதிர்ப்பை பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அந்தோணி கூறினார்.வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறியதாவது:இந்திய வீரர்களின் உடல்களை, பாகிஸ்தான் ராணுவத்தினர் உருக்குலைத்த சம்பவம், கடும் மன வேதனையை அளிக்கிறது. இது, மிகவும் கவலை அளிக்கும் செயல். இரு நாடுகளுக்கு இடையேயான, நட்புறவு வளர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த நடவடிக்கை, அதற்கு, கடும் இடையூறாக இருக்கும்.இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.இதற்கிடையே, கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் இருவரின் தலைகளையுமே, பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்ததாகவும், அதில், ஒருவரின் தலையை, அவர்கள் எடுத்துச் சென்றதாகவும், ராணுவ வட்டாரத்தில், ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
தொடர் தாக்குதல்
இரண்டு ராணுவ வீரர்களை கொலை செய்த பின்னும், பாகிஸ்தான் ராணுவம், தன் அட்டூழியத்தை நிறுத்தவில்லை. நேற்று முன்தினம் இரவு, காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, நான்கிட்கிரி முகாம் மீதும், பாகிஸ்தான் வீரர்கள், இரண்டு முறை தாக்குதல் நடத்தினர்.தொடர்ந்து, அரை மணி நேரம், பீரங்கிகள் மூலமாகவும், ராக்கெட்டுகள் மூலமாகவும், பாக்., வீரர்கள் தாக்குதல் நடத்தினர் என்றும், இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்படவில்லை என்றும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
எங்களுக்கு தெரியாது:பாகிஸ்தான் கூறுகிறது
பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்திய வீரர்களை, பாக்., ராணுவத்தினர் தாக்கியதாக வெளியான தகவல் உண்மை அல்ல. பாகிஸ்தான் தரப்பில், இது போன்ற தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என, இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, முறையாக விசாரித்து, உறுதி செய்யும்படியும், இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், பாகிஸ் தான் ராணுவத்துக்கு எதிராக, இந்திய அதிகாரிகள், பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.இவ்வாறு பாக்., ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நம் நாடு பல வழிகளிலும் சீரழிந்து கொண்டிருக்கிறது...காரணம் முற்போக்கு சிந்தனை இல்லாத ஆட்சி, மன தைரியம் இல்லாத தலைமை, மனதார எதையும் செய்ய முடியாத மன்மோகன்...மனசாட்சியே இல்லாமல் பல விதங்களிலும் பாகிஸ்தான் நமக்கு துன்பம் கொடுத்து கொண்டிருக்கிறது...இவர்கள் அவர்களுடன் பல ஒப்பந்தங்கள் செய்கிறார்கள்..நமது நாட்டில், குறிப்பாக தமிழகம் மின்சாரம் இல்லாமல் வரி செலுத்தும் நாம் அன்றாடம் அல்லோலபடுகின்றோம்..இங்கிருந்து 50000 மெகாவாட் பாகிஸ்தானுக்கு தருகின்றோம் என்கின்ற மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை தூக்கி எரியும் நாள் வெகு விரைவில் இல்லை என்பதி மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்..இறந்தவர்களுக்கு எல்லோரும் தெரிவிக்கும் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்....
சபாஷ். இதை விட மத்திய அரசு வேறு என்ன தான் செய்ய முடியும்? நேருவின் நாசமாய்ப்போன,துருப்பிடித்த அயலுறவுக்கொள்கையை கடைப்பிடிக்கும் மானம்கெட்ட சோனியா அரசிடம் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும். காரணம். நம் வீரர்களை கொன்றது பாகிஸ்தான். பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்தால் அது மத சார்பின்மைக்கு எதிராகி விடும். அந்த பாவத்தை செய்வதை விட நம் வீரர்களை இழப்பது எவ்வளவோ மேல் என்று மத்திய அரசு தன் மத சார்பின்மை கற்பை காப்பாற்றி கொண்டிருக்கிறது. சொந்த மண் காஷ்மீரில் இந்துக்களை வாழ விடாமல் விரட்டி அடித்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கேடு கேட்ட, கையாலாகாத காங்கிரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? சொந்த மாநிலமான தமிழத்துக்கு மின்சாரம் தர மனமில்லாமல், வீடு புகுந்து அடிக்கும் மத வெறி பிடித்த பாகிஸ்தானுக்கு மின்சாரம் தரும் மானம் கேட்ட மத்திய அரசிடம் தேச பக்தியை எப்படி எதிர்பார்க்க முடியும்?கரப்பான் பூச்சி போல் காலின் கீழ் கிடக்கும் இலங்கை நம் மீனவர்களிடம் வாலாட்டுவதை தடுக்க முடியாத சுரணை கெட்ட மத்திய அரசா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க போகிறது? கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேச்சு வார்த்தை என்ற பித்தலாட்ட நாடகத்தை அரங்கேற்றும் தரங்கெட்ட மத்திய அரசை தேர்ந்தெடுத்ததற்காக ஒவ்வொரு இந்தியனும் தலைகுனிய வேண்டும். இனி இந்த தவறை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்து, வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாச கார காங்கிரசை ஓட ஓட விரட்டினால் எதிர்காலத்திலாவது இத்தகைய கேவலங்கள் அரங்கேறாமல் தடுக்கலாம்.
காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை இந்தியாவ கடவுள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது...
இந்த மாதிரி வேற சின்ன தீவு நாட்டுக்கு நடந்திருந்தா கூட அந்த நாடு வேட்டிய மடிச்க்கிட்டு தப்பு பண்ணினவன் நாட்டுக்கு போய் பொலந்து எடுதிருப்பாங்க. ஆனா நம்ம இந்தியாவுக்கும் மட்டும் கோபம் சொரணை ரோசம் எதுவும் வராது... ( மன்னிக்கும் நான் சொன்னது மக்களையோ ராணுவ வீரர்களையோ இல்ல நம்ம அரசியல் வாதியையும் காங்கிரஸ் கட்சியும் ) பிஜேபி ஆட்சிக்கு வரணும் நரேந்திர மோடி பிரதமர ஆகட்டும். அப்புறம் வந்து பாருங்கட பாகிஸ்தான் பரதேசிகளா....
இந்த அயோக்கியர்களை இனிமேல் விடக்கூடாது. நமது ராணுவம் பதில் அடிகொடுக்க வேண்டும். அந்த கயவர்களின் தலையினை துண்டித்து இந்திய ராணுவம் எதுக்கும் துனிஞ்சவர்கள் என்று காட்ட வேண்டும். இனிமேல் நமது ராணுவ சகோதரர்களிடம் போர் செய்யவே பயப்பட வேண்டும்,இதுபோல் கண்டிப்பாக செய்தால் நமது இந்திய எல்லைக்கு வரவும் செய்வார்கள்.jaihind
there is a bad tency of late. whenever such ings happen, they say it is by terrorists and not by army within the country also for any terrorist activitty, they say it is by misguided youth, etc and would ask for more concessions to such people and another common statement from all the press ppl and secular ppl is 'terrorists have no religion' - BUT some imam somewhere would pray for such terrorists. even for kasab prayers were held by an imam in kerala. some other outfit wanted his body for a honourable burial so wht these indicate?
the govt is very useless in dealing with such ppl/situations.
whether it is by terrorists or by pak army, india should give a fitting reply that pakis will not ever wag their tail. if our govt cannot do it let them hand over the management to israel for sometime. beccause it is only the ordinary citizens who have to face all problems. the politican and rich ppl continue to enjoy police/army protection always and have enough money for all their generations.
after watching owaisi's hate statement in Youtube and the way he is supported by lots of his muslim followers - it is really very shocking and i wonder whether we have more enemies within the country than outside. that way i think tamil nadu muslimsand hindus show more frilliness and brotherhood towards each other.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.