"விஸ்வரூபம்?' 25ம் தேதி வெளியீடு: கமல் புது முடிவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: விஸ்வரூபம் படத்தை ஜனவரி 25ம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள, "விஸ்வரூபம்' சினிமா, வரும், 11ம் தேதி தியேட்டர்களிலும், 10ம் தேதி இரவு, 9:30 மணிக்கு டி.டி.எச்., முறையில், 'டிவி'யிலும் வெளியிட, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டி.டி.எச்.,சில் வெளியிட, தமிழக சினிமா தியேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர், எதிர்ப்பு தெரிவித்தனர். விஸ்வரூபம் சினிமாவை வெளியிடக் கூடாது என, தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நேற்று கமல் அளித்த பேட்டி:
"விஸ்வரூபம்' படத்தை, டி.டி.எச்., வசதியில் வெளியிட, அரசிடம் உரிய அனுமதி பெற்று, ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தை டி.டி.எச்.,சில் வெளியிடக் கூடாது என, எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. மத்திய அரசின், போட்டிகள் முறைப்படுத்தும் ஆணையம் மூலம், முறையாக அனுமதி பெற்று, படம் வெளியிடப்படும் போது, முட்டுக்கட்டை போடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க முடியும்; அதற்கு தண்டனையும் இருக்கிறது; அபராதம் விதிக்க முடியும். என்னுடைய பொருளை விற்பனை செய்வதற்கு, எனக்கு மட்டுமே உரிமை உள்ளது; தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. என்னுடைய பொருளை, வேறு ஒருவர், எப்படி விற்பனை செய்ய முடியும்? எனக்கு மிரட்டல் விடுத்துள்ள, 13 பேருக்கு, அட்வகேட் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது, வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறேன். என் திரையுலக நண்பர்கள் கேட்டுக் கொண்டதால், "விஸ்வரூபம்' படம், டி.டி.எச்., வசதியிலும், தியேட்டரிலும் திரையிடப்படுவது, தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போது, தியேட்டரில் வெளியிடப்படும், எப்போது, டி.டி.எச்., முறையில் வெளியிடப்படும் என, பின்னர் நானே அறிவிப்பேன். தியேட்டரிலும், டி.டி.எச்.,சிலும், ஒரே நேரத்தில் வெளியிடலாம் என, நண்பர்கள் சொல்கின்றனர்.
சிலர், இரண்டு, மூன்று தடவைகள், டி.டி.எச்..சில் வெளியிடலாம் எனவும் கூறுகின்றனர். நான் எல்லாவற்றையும் யோசித்து, முடிவு செய்ய உள்ளேன். என் பட வியாபார தொடர்புகளை, நானே பேசி முடித்துக் கொள்ள, எனக்கு தெரியும்.
சினிமா சங்கத்தை சேர்ந்தவர்கள், என் முயற்சியை, தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கின்றனர். டி.டி.எச். , வழியாக படத்தை வெளியிடுவது, இப்போது தனி வழியாக தெரியும்; காலப்போக்கில், இது பொது வழியாகும். என் ரசிகர்கள், அமைதியாக இருக்கின்றனர்; தேவைப்பட்டால் கேடயமாக மாறுவர்."விஸ்வரூபம்' படம் குறித்து, ராஜ்கமல் அலுவலகத்திலிருந்து வெளியிடும் தகவல்களே ஊர்ஜிதமானது. அலுவலக கதவுக்கு வெளியே, யாரோ எதையோ சொல்லிக் கொண்டிருந்தால், அதை பற்றி கண்டுகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இந்நிலையில் விஸ்வரூபம் 25ம்தேதி வெளியிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (56)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharajan - Oslo,நார்வே
12-ஜன-201316:15:58 IST Report Abuse
Varatharajan உலக நாயகன் இந்த உலகமே உம்மையே சினிமாத்துறையில் எதிர் பார்த்து காத்து இருக்கிறது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு புதிய முயற்சி இந்த புதிய முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும் வெற்றியடைய வாழ்த்துக்கள் உமது ரசிகன் என்ற முறையில்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
12-ஜன-201310:07:04 IST Report Abuse
Tamilan அப்படியே நம்ம ரஜினிய போட்டு வாங்கிட்டிங்க போல............
Rate this:
Share this comment
Cancel
Anniyan Bala - Chennai,இந்தியா
11-ஜன-201306:57:57 IST Report Abuse
Anniyan Bala இங்கு கமலுக்கு எதிராக கருத்து பதிவும் செய்யும் நண்பர்களே. அவரது கருத்துகளை கூர்ந்து ஆராய்ந்து பாருங்கள். அவர் சொல்வது மிக சரியே. ஏன் நீங்கள் உங்கள் உடமைகளை விற்க, அடுத்தவரின் ஆலோசனை கேட்பீர்களா என்ன? இல்லை தானே? அதை தான் உலகநாயகன் செய்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
11-ஜன-201300:24:21 IST Report Abuse
Sundeli Siththar டி.டி.எச் க்கு எவ்வளவு பேர் பதிவு செய்துள்ளனர்?
Rate this:
Share this comment
Cancel
pasupathi - muscat,ஓமன்
10-ஜன-201316:41:38 IST Report Abuse
pasupathi கமல் அவர்களே முதலில் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்தீர்கள் ....இப்போது நஷ்டம் வருகிறது ...அதனால் இந்த புது வழி .. சுயநல தனி வழி இல்லை என்று ரஜினியையும் ஒரு பிடி பிடித்து மேலும் உங்கள் பேரை கெடுத்துக்கொண்டு நின்றால் யார்தான் உங்கள் படத்தை போய் பார்ப்பார்கள் ...ஹே ராம் , ஆளவந்தான் ...பட்டதே போதும்...பட்டும் திருந்தாதவர் என்றால் நம்ப கமல்தான்
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
10-ஜன-201315:46:54 IST Report Abuse
thirumalai chari மற்றுமொரு, திரைக்கு வந்து சில வினாடிகளே ஆன பட வரிசையில் இப்போது விஷ்வாவின் ரூபம்.
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
10-ஜன-201315:44:43 IST Report Abuse
thirumalai chari விஷ்வாவின் ரூபம் கோவிந்தா.... கோவிந்தா... சோற்றுக்கே வழி காணோம், பொழப்பு சிரிப்பா சிரிக்குது. இதுல இவர் கூத்தை எங்கே ரசிக்கிறது. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு. ஒருவன் வாழ்வதை அனைவரும் மலைத்து பார்க்கும் காலம் மாறிப்போச்சு.
Rate this:
Share this comment
Cancel
Ding Dong - Singapore,சிங்கப்பூர்
10-ஜன-201315:09:11 IST Report Abuse
Ding Dong அப்டியே படமும் நல்லா இருந்தா சூப்பர். DTH ல தான் முதலில் வருமுன்னு காசு வசூல் பண்ணிட்டு, முதல்ல த‌ியேட்டர்ல வெளியிடாம, சொன்னபடி நடக்கணும்
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
10-ஜன-201314:13:49 IST Report Abuse
v j antony ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதி வேண்டும். 1000 ருபாய் recharge செய்தவர்களை ஏமாற்ற கூடாது
Rate this:
Share this comment
Cancel
Riaz Karur - Karur,இந்தியா
10-ஜன-201314:05:58 IST Report Abuse
Riaz Karur வீட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து புதுபடம் பார்க்கிற சுகம் தனிதான்...ஆனால் விளம்பரம், மின்தடையில்லாமல் இருந்தால் நல்லா இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்