Advertisement
சூரிய மின் உற்பத்திக்கு வரவேற்பு இல்லை: யார் காரணம் ?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,23:09 IST

சூரியசக்தி மின் உற்பத்திக்கு, 1,000 மெகாவாட் திறனுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதில், 499 மெகாவாட்டுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதில், இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும் போது, 200 முதல் 250 மெகாவாட்டுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக, துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சூரியசக்தி மின் கொள்கையில், இந்த ஆண்டிற்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 1,000 மெகாவாட் உற்பத்தியை எட்ட வாய்ப்பில்லை என, தெரிகிறது.

விண்ணப்பங்கள்
கடந்தாண்டு, அக்டோபர் 20ம் தேதி, தமிழகத்திற்கான சூரியசக்தி மின் கொள்கை வெளிடப் பட்டது. அதில், சூரியசக்தி மூலம், அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.அதன்படி, 1,000 மெகாவாட் உற்பத்திக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள், கடந்த, 4ம் தேதி திறக்கப்பட்டன. இதில், மொத்தம், 499 மெகாவாட் உற்பத்திக்கு, 90 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்தது.தேசிய சூரியசக்தி மின் கொள்கையின் கீழ், முதலில், 150 மெகாவாட் உற்பத்திக்கு நிறுவனங்கள் வரவேற்கப்பட்ட போது, 5,000 மெகாவாட் அளவிற்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அதை ஒப்பிடும்போது, தற்போது வந்துள்ள விண்ணப்பங்கள் மிகக் குறைவே.இதற்கு, தமிழக சூரியசக்தி மின் கொள்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் டான்ஜெட்கோவின் நிதி நிலையும் தான் காரணம் என, கூறப்படுகிறது.தற்போது பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் ஆய்விற்கு பின், இந்த மாதம், 19ம் தேதி, ஒப்பந்தத்திற்கு தகுதியான நிறுவனங்கள் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. அதிகபட்சம், 250 மெகாவாட் உற்பத்திக்கான விண்ணப்பங்கள் மட்டுமே, ஒப்பந்த தகுதியை எட்டும் என, துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்பக தன்மை?
தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, மாநில தொகுப்பிற்கு வழங்கும் போது, டான்ஜெட்கோ தான் பணம் கொடுக்க வேண்டும்.ஆனால், தற்போது, பல காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, நீண்ட காலமாக பணம் கொடுக்கப்படவில்லை. மேலும், பல நேரங்களில், உற்பத்தியாகும் மின்சாரம், தொகுப்பில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.
இதனால், காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, கடும் நஷ்டம் ஏற்படுகிறது. தொடர் நஷ்டத்தால், இந்த துறையில் முதலீடு, கணிசமாக குறைந்து விட்டது. இது ஒரு, முன் உதாரணமாக இருப்பதால், சூரியசக்தி உற்பத்திக்கும், இதே கதி நேரிடுமோ என, முதலீட்டாளர்கள் அஞ்”கின்றனர்.இந்த நிலையை ஓரளவிற்கு சீர் செய்ய, "டீம்டு பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்' அதாவது, "வாங்கியதாக கருதப்படும்' என்ற, உத்தரவாதத்தை அரசுகொடுக்க வேண்டும். அதன்படி, உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தை, தொகுப்பிலிருந்து எடுத்தாலும் அல்லது எடுக்கா விட்டாலும், அதற்கான பணத்தை கொடுக்க, டான்ஜெட்கோ தயாராக வேண்டும்.அதே போல், டான்ஜெட்கோவின் நிதி நிலையை கருதி, ஒரு தனி கணக்கு மூலம், சூரியசக்தி மின் உற்பத்தியாளர்களுக்கு பணம் கிடைக்கும் என்பதற்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
குறைந்த விலை

தற்போது, யூனிட்டுக்கு, 8 ரூபாய் என்ற அடிப்படையில், ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இதைவிட குறைவாக விண்ணப்பித்தவர்களுக்கே, முதலில் ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால், தமிழகத்தை பொறுத்த வரை இந்த விலை, மிகவும் குறைவானது என்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துப்படி -
* சொந்த முதலீடு, 35சதவீதம்; கடன், 65சதவீதம் என்ற அடிப்படையில், 11சதவீதத்திற்கும் குறைவான வட்டியில் மட்டுமே, இந்த விலைசாத்தியப்படும்.
* குஜராத்தில், ஒரு மெகாவாட் மின் சூரிய மின்சக்தி மின் நிலையம் அமைத்தால், அதிலிருந்து, ஆண்டுக்கு, 17.5 முதல் 18 லட்சம் யூனிட்கள் வரை கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தில், 16 முதல் 16.5 லட்சம் யூனிட் மட்டும் தான் கிடைக்கும். இதனால் தான் குஜராத்தில் யூனிட்டுக்கு, 8 ரூபாய்சாத்தியமாகிறது.
* தமிழகத்தில், முதலீட்டாளர்கள் நஷ்டப்படாமல் இருக்க வேண்டுமானால், யூனிட்டிற்கு, 9 முதல், 9.25 ரூபாய் கிடைக்க வேண்டும்.ஆனால், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்து உள்ள விலை, யூனிட்டிற்கு, 8 ரூபாய் தான். இதைவிட அதிகமாக தமிழக அரசால் கொடுக்க முடியாது. இதைசரி செய்ய, அரசிடம் இருந்து முதலீட்டு செலவை குறைக்கும் வகையில், முதலீட்டாளர்கள்,சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.மேலும், சூரியசக்தி திட்டங்களில் இருந்து லாபம் கிடைக்க, குறைந்தது, ஐந்து ஆண்டுகளாவது ஆகும் என்பதால், தற்போது நிலவும், 12-13சதவீத வட்டி விகிதத்தில், கடன் வாங்கி முதலீடு செய்வதுசாத்தியப்படாது என, முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.இதைசரி செய்ய, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மூலம், 5சதவீத வட்டியில், மொத்த திட்ட முதலீட்டில், 80சதவீதம் வரை கடன் பெற்றுத் தர அரசுமுயற்சிக்க வேண்டும்.

சலுகைகள்
குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேஷ், காஷ்மீர் உட்பட, சில மாநிலங்கள், பிரத்யேக சூரியசக்தி மின் கொள்கைகளை, கடந்த சில ஆண்டுகளாகவே, அறிவித்து வருகின்றன. மேலும் சில மாநிலங்கள், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி கொள்கைகள் மூலம், சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவித்து வருகின்றன.அந்த அடிப்படையில், தமிழகத்தின் சூரியசக்தி மின் கொள்கை, மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது என, கருதலாம். இது கடந்த ஆட்சி காலத்திலேயே, அறிவிக்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.
பல முன்னணி நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில், ஏற்கனவே தங்கள் முதலீடுகளை முடித்துக் கொண்ட நிலையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க, சிலசலுகைகளை அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது.
* மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில், நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. திட்ட செலவில், அது பெரும் பங்கை வகிக்கிறது. இதைசமாளிக்க, ஹரியானா,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள், அரசுநிலங்களை நீண்ட கால குத்தøக்ககு கொடுக்கின்றன. இதுசாத்தியப்படாது என்றால், வழிகாட்டி மதிப்பிலாவது, நிலங்கள் கிடைக்க செய்யலாம்.
* தமிழகத்தில் தற்போது உள்ள அதிகாரிகளின் அணுகுமுறை, தொழில் சூழலுக்கு ஏதுவாக இல்லை என்பது, தொழில் துறையினரின் கருத்து. குறிப்பாக கீழ் நிலை அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற, குற்றச்சாட்டு உள்ளது. இதைசரி செய்தால், திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். இதன் மூலம் முதலீட்டு செலவு குறையும்.
* உற்பத்தியாகும் மின்சாரத்தை தொகுப்பிற்கு கடத்துவதற்கு, தரம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்க, ஒரு கி.மீ.,க்கு, 8 முதல், 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. இச்செலவை, தனியார் நிறுவனமே ஏற்க வேண்டி உள்ளது. 5 கி.மீ., வரைக்கான செலவை, அரசே ஏற்கலாம்.
* துணை மின் நிலையங்களின் பராமரிப்புக்கென, மாதத்தில் ஒரு நாள், விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த நாளில் மின்சாரம் எடுக்கப்படுவதில்லை. இதனால், உற்பத்தியாளருக்கு மாத உற்பத்தியில், 3சதவீதம் வரை வீணாகிறது. சூரியசக்தி மின் நிலையங்களில், இது, 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை, நஷ்டத்தை ஏற்படுத்தும். விடுமுறை நாட்களில், வேறு துணை மின் நிலையம் மூலம் மின்சாரத்தை கடத்த, ஏற்பாடு செய்து கொடுக்கலாம். இதற்கு, 3 லட்சம் ரூபாய் செலவிலான, "”விட்ச்' கருவி, துணை மின் நிலையத்தில் நிறுவப்பட வேண்டும்.இத்தகையசலுகைகளை கூடுதலாக அறிவித்தால், கூடுதல் முதலீடுகளை ஈர்க்க வாய்ப்பு உள்ளது.

கட்டாய கொள்முதலும் தோல்வி?


தமிழக சூரியசக்தி மின் கொள்கையில், உயரழுத்த மின் நுகர்வோர், தங்கள் நுகர்வில் கட்டாயமாக, 6சதவீதத்தை சூரியசக்தியில் இருந்து பெற வேண்டும் என்ற, கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டது. இதை, 2014ம் ஆண்டிற்குள், அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.ஆனால், இதுவரை இது கொள்கை அளவிலேயே உள்ளது. இதை செய்யாவிட்டால், என்ன தண்டனை என்பது குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு, குறிப்பிட்டு, அதைசட்டமாக்கினால் மட்டுமே, அதில் முதலீடு செய்ய, தனியார் நிறுவனங்கள் முன்வரும் நிலை உள்ளது.இதுசட்டமாக்கப் படாததால், எந்த ஒரு நிறுவனமும், இதில் முதலீடு செய்ய இதுவரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தேவை குறித்து, "தினமலர்' நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளிடப்பட்டது.

கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுமா?

சூரிய சக்தி மின் உற்பத்திக்கு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாத நிலையில், கொள்கை குறைபாடுகள் களையப்பட்டால் முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்கள் தயாராக உள்ளன.கொள்கை திருத்தங்கள், தேவையானசலுகைகள் குறித்து, ஏற்கனவே இந்த தொழிலில் உள்ள நிறுவனங்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்தினால், நடைமுறை சிக்கல்கள் அர”க்கு தெரியவரும். இதன் மூலம் கொள்கையை மேம்படுத்தலாம்.

- ஆர்.கிருஷ்ணமூர்த்தி -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (72)
Dhanabal - Thoothukudi,இந்தியா
12-ஜன-201312:50:42 IST Report Abuse
Dhanabal சாலை மற்றும் கட்டுமான பணி செய்யும் ஒப்பந்தகாரரை கேட்டால் யார் யாருக்கு எவ்வளவு கமிசன் கொடுத்து வேலைக்கான உத்திரவை பெற வேண்டியது உள்ளது என்ற நிலவரத்தை தெளிவாக கூறி விடுவார்.அந்த அளவுக்கு ஊழல் அரசுத்துறைகளில் கொடிகட்டி பறக்கிறது.அரசுத்துறைகளில் கமிசன் என்பது வற்புறுத்தி பெறப்படுகிறது. இந்நிலையில் சூரிய ஒளி மின் தயாரிப்புக்கு, ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகளை கவனித்து கவனித்து நொந்து போக வேண்டிய கொடுமைக்கு பயந்தே, முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய தயங்க காரணமாகும். ஆட்சி நிர்வாகத்தில் புரையோடி போயுள்ள கமிசன் முறை ஒழிக்கப்பட்டாலொழிய இத்திட்டத்தில் மட்டுமல்ல, வேறு எந்த திட்டங்களிலும் முதலீட்டாளர்களை ஈர்க்க இயலாது.கமிசன் முறை ஒழிக்கப்படாதவரை முதன்மை மாநிலம் என்பதெல்லாம் வெறும் கனவே...
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Prabhakaran Shenoy - cuddalore,இந்தியா
11-ஜன-201308:10:54 IST Report Abuse
Prabhakaran Shenoy தமிழ்நாட்டு மக்களுக்கு சூரியன் என்றாலே நம்பிக்கை போய் விடுகிறது.
Rate this:
78 members
2 members
22 members
Share this comment
Ding Tong - Thiruchy,இந்தியா
11-ஜன-201308:01:54 IST Report Abuse
Ding Tong நல்லவேளை தலைப்ப படிச்சோன்ன உள்ள மத்திய அரசு சதி திமுக முட்டுக்கட்டை அப்படின்னு இருக்குமுன்னு பார்த்தேன். சூரியன் சுட்டெரிக்கிறது தாங்காம தான் அம்மா போய் கோடநாட்டுல ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காங்க. மறுபடியும் மறுபடியும் ஏன் அவர தொந்தரவு பண்றீங்க. மக்களா ஓய்வு கொடுத்து அனுப்பிய கருணாநிதிய தொந்தரவு பண்ணுறது பத்தாதுன்னு அம்மாவை தொந்தரவு பண்ணுரின்களே. ஓய்வில் இருக்கிறவங்கள தொந்தரவு பண்ணுறதே உங்க வேலைய போச்சு.
Rate this:
4 members
0 members
117 members
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
11-ஜன-201306:06:57 IST Report Abuse
சாமி டாஸ்மாக் போல் லாபம் கிடைக்கும் தொழில் எல்லாம் அரசு நடத்தும். லாபம் இல்லாத தொழில் தனியார் நடத்த வேண்டுமா ??
Rate this:
4 members
0 members
44 members
Share this comment
Dr.Swami D Francis - Khomes,லிபியா
10-ஜன-201317:35:40 IST Report Abuse
Dr.Swami D Francis மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தொழில் சூழல் சரியாக இல்லை என்ற காரணமும், இத்திட்டத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணமாக கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளது. இது தமிழகத்தின் அரசியல் சூழல், மக்கள் நலனை முன் வைக்காமல், தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை முன் வைத்து செயல் படும் தமிழக அரசின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைக் கிடப்பில் போடுவதால் மக்கள் வரிப்பணம் எவ்வளவு வீணாகிறது என்பதை தற்போதைய அரசு எண்ணிப் பார்த்து மக்கள் நலனை முன் நிறுத்தி செயல் பட்டல் மட்டுமே இந்த நிலை மாறும். இன்னொன்று, இங்குள்ள அதிகாரிகள் எந்த அளவு ஒரு திட்டத்தின் நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்க்காமல், திட்டக் கொள்கைகளை அரைகுறையாக தயாரிக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. ஏற்கனவே, மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் தர அரசியல் வேறுபாடு தான் காரணம் என்று மத்திய காங்கிரஸ் அரசை குறை கூறி உச்ச நீதி மன்றம் சென்ற போது, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டுவரத் தேவையான கட்டுமான அமைப்பு இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது நினைவிருக்கலாம். மக்கள் நலனில் உண்மையான அக்கரையோடும், முழுமையான ஈடுபாட்டோடும் திட்டங்களை தமிழக அரசு அறிவிப்பதாகத் தெரியவில்லை அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்கவும், துரிதமாக செயல் படுவதாகக் காட்டவும், அவசர கதியில் நடைமுறைப் படுத்த முடியாத திட்டங்களை விளம்பரத்துக்காக ஒவ்வொரு நாளும் அறிவித்து, ஒரு தொடக்கவிழாவும் நடத்தி, சாதனைகளாக அவற்றை பட்டியலிடும் இந்த அரசியல் சித்து விளையாட்டுக்களை அடுத்த தேர்தல் வரை சகிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் தமிழக மக்களால்
Rate this:
8 members
2 members
203 members
Share this comment
manoharan - chennai,இந்தியா
10-ஜன-201316:58:58 IST Report Abuse
manoharan சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதும் இப்போதைக்கு நமக்கு உகந்தது இல்லை. பெரிய அளவில் அந்த தொழில் நுட்பம் இன்னும் வளரவில்லை. அது மாத்திரம் அல்ல, அந்த தட்டுகளில் படியும் தூசியை தானாக துடைக்க கருவிகள் வேண்டும். அவை சென்னை போன்ற உப்பு காற்று வீசும் இடங்களில் சரியாக இயங்காது. மற்றும் அந்த தட்டுகளை சூரிய கதிர்கள் வரும் திசைக்கு தொடர்ந்து திருப்பி கொண்டே இருக்க தானியங்கி கருவிகள் தேவை. இவைகளை பராமரிப்புதும் கஷ்டம், உப்பு காற்றில் பளுதடைவதும் அதிகம். ஆகவே அவசரப்பட்டு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க செல்லாதீர்கள்.
Rate this:
29 members
1 members
101 members
Share this comment
saravanapandi - karaikudi,இந்தியா
10-ஜன-201313:55:17 IST Report Abuse
saravanapandi 100mw ஊற்பத்தி செய்யட்டும்.அடுத்த 3ஆண்டுகளில்.அதுவே முடியாது்
Rate this:
2 members
1 members
89 members
Share this comment
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
10-ஜன-201313:37:36 IST Report Abuse
Mohamed Nawaz அம்மையாரின் ஆட்சியில் எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட உருவாக போவதில்லை என்பது நிதர்சன உண்மை. அம்மையாரிடம் ஆட்சியை கொடுத்தற்கு பதில் மோடியிடம் கொடுத்திருக்கலாம். வழித்தடம் இல்லாமல் எப்படி மின்சாரம் மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவர முடியும்.
Rate this:
7 members
0 members
182 members
Share this comment
பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
10-ஜன-201312:57:38 IST Report Abuse
பட்டிகாட்டான்   அரசு அதிகாரி, அரசியல் வியாதி, லோக்கல் கவுன்சிலர்லேருந்து தலைவர் வரைக்கும் கட்டிங் கொடுக்கணும் ... இதெல்லாம் எந்த கணக்கு ... எந்த ஆட்சி வந்தாலும் இந்த நாய்ங்க தொந்தரவு தான் மாறவே மாறாதே ...
Rate this:
3 members
62 members
30 members
Share this comment
பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
10-ஜன-201312:54:36 IST Report Abuse
பட்டிகாட்டான்   இந்த மாதிரி நிறுவனங்கள் பின்னாடி ஓடுறத அரசு கைவிட்டுட்டு, பேசாம ஜனங்களே தங்கள் வீடுகளில் சூரிய மின்சக்தி கலன்கள் நிறுவ மின்பகிர்மான கழகம் மூலம் தகடுகள், வங்கிகள் மூலம் குறைந்த வட்டியுடன் கடன் மற்றும் அரசின் மானியம் ஆகியவை கொடுத்து ஏற்பாடு உதவி செய்யலாம் ... ஒரு ஊரில் 200 பேர் முன்வந்தாலும் மொத்த தமிழகத்தில் ஒரே வருடத்தில் 3000 மெகா வாட் மின்சாரம் தயார் பண்ண ஏதுவாக இந்த திட்டம் இருக்கும் ... அதா விட்டுட்டு ....
Rate this:
1 members
1 members
59 members
Share this comment
Thangavelu Palaniappan - modakkurichi,இந்தியா
11-ஜன-201307:21:42 IST Report Abuse
Thangavelu Palaniappanithanai naam யோசிக்க வேண்டும் .அத்துடன் எல்லா தெரு விளக்குகளும் எரியும் நேரத்தை ஒழுங்கு செய்யவேண்டும். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை எரிந்தால் போதும். மற்றபடி எல்லா ரியல் எஸ்டேட் காரர்களும் கண்டிப்பாக சூரிய மின்சார தெரு விளக்குகள் அமைப்பதை, அப்ரூவலுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டாயமாக்க வேண்டும் ....
Rate this:
1 members
1 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.