கோத்தகிரி: ""தமிழக மக்கள் எல்லாமும் பெற்று, மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில், கூட்டுறவு பண்டக சாலையின் கோடநாடு கிளை ரேஷன் கடையில், பொங்கல் பரிசு திட்ட துவக்க விழா, நேற்று நடந்தது.மாநில முதல்வர் ஜெயலிலதா, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்து, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கி பேசியதாவது:"எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்பதே அரசின் கொள்கை. பொங்கல் நாள் நெருங்குகிறது. மக்களுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம். பருவமழை பொய்த்துவிட்டது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்கள், கேள்விக்குறியாக உள்ளன.இருப்பினும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகுப்பு அளிக்க அறிவித்துள்ளோம்.பொங்கல் திருநாளை மாநில மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான், பொது வினியோக திட்டம் மூலம், பொங்கலை முன்னிட்டு, 1.84 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும், 100 ரூபாய் ரொக்கம் என, 160 ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசுடன், விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள 1.84 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இப் பரிசு வழங்கப்படும். வரும், 13ம் தேதி ஞாயிற்று கிழமை விடுமுறை என்றாலும், அன்றைய தினம் ரேஷன் கடைகள் இயங்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எது எப்படியோ முதல்வர் அவர்கள் மீண்டும் மக்களுக்கு நன்மை செய்துள்ளார். எந்த ஒரு செயலையும் விமர்சனம் செய்வது சுலபம். முதல்வரை விமர்சனம் செய்பவர்கள் முடிந்தளவுக்கு பிறருக்கு நன்மை செய்து பாருங்கள்,அது எவ்வளவு கடினம் என்பது தெரியும். முதல்வர் யாராக இர்ருந்தலும் அவருக்கும் அவருடைய வயதிற்கும் மரியாதையை கொடுத்து பேசுங்கள்.தயவு செய்து....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.