சென்னை: "கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்புக்கு, அரசு டெண்டர் கோரியுள்ளதால், இம்மாதம், 19ம்தேதி, நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக, பொதுக்கூட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை பராமரிப்புப் பணிக்காக, கண்டன ஆர்ப்பாட்டம், இம்மாதம், 19ம்தேதி நடத்தப்படும் என, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.சிலை பராமரிப்புக்காக, அரசின் சார்பில், ஒப்புதல் அளிக்கப்பட்ட, டெண்டர் விளம்பரம் நேற்று வெளியாகியுள்ளது. இது, நமக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இனி, வருங்காலத்திலும் சிலை பராமரிப்புப் பணிகளை, தொடர்ந்து அரசு மேற்கொள்ள வேண்டும்.செம்மொழி தொடர்பாக, தி.மு.க., ஆட்சியில், துவக்கப்பட்ட செயல் திட்டங்களுக்கு, அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குப் பதிலாக, அதே நாளில் பொதுக்கூட்டம் நடைபெறும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி கூறியதாவது:கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள, திருவள்ளுவர் சிலை பழுதடைந்துள்ளதை சீரமைக்க நானும், பல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தோம். திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பாதையில், ஆழத்தை காரணம் காட்டி, படகு போக்குவரத்து அடிக்கடி நிறுத்தப்படுகிறது. எனவே, அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். வெளி மாநிலத்தினரும், வெளிநாட்டினரும் கன்னியாகுமரிக்கு வருவதால், தமிழக அரசின் சுற்றுலாத்துறை, திருவள்ளுவர் சிலைக்கு படகை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அøக்க வேண்டும். இது குறித்து, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். பாலம் அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். கடல் சீற்றம் இருந்தால், பால போக்குவரத்திற்கு தடை விதிக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திருவள்ளுவர் வெறும் சிலை வைத்து அரசியல் பண்ண மட்டும் தான் தெரியும்..,திருக்குறள் விளக்க வகுப்புக்கு நடத்த தெரியாது.., திருக்குறள் மட்டும் படித்தால் போதும் சிறப்பான சமுதாய சிலையாய் மாறிவிடுவான். திருக்குறளை தமிழர்கள் வேத நூலக வணங்கபடவேண்டும்..,திருவள்ளுவருக்கு செய்யும் நாம் செய்யும் சரியான மரியாதை. திருகுறளில் நம்மோடு தினமும் அவர் தெய்வமாய் வாழ்வர். வழி காட்டுவார்
கோவையில் நடைபெற இருக்கும் திமுக வின் பொதுக்குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக அறிவிக்க போவதாகவும் அதை ஏற்காத அழகிரி பொதுக்குழுவை புறக்கணிக்க போவதாகவும் தொடர்ந்து சில நாட்களாக அனைத்து பத்திரிகைகள்,ஊடகங்களில் ஒரே மாதிரியான செய்தி உலவிவருவது கருணாநிதியே அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்பிவைத்த அறிக்கை போல உள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகவே உள்ளது. மேலும் கருணாநிதியே மக்களை ஏமாற்ற செய்து வருகிற நாடகமாகவே கருத முடிகிறது.
திமுகவின் மாவட்ட செயலாளரும், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளருமான தா.கிருஷ்ணன் கொலைக்கு அழகிரிதான் காரணம் என தமிழக மக்கள் பலரும் இன்றுவரை நினைத்து கொண்டிருக்கையில் அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அழகிரியை முதலில் சென்று பார்த்தது ஸ்டாலின் தான். அது மட்டுமல்ல சிறைக்கு வெளியில் இந்த கொலைக்கும் அண்ணன் அழகிரிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் இது பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட கைது நடவடிக்கை எனவும் பேட்டி அளித்தவர்தான் ஸ்டாலின். தமிழம் முழுவது உள்ள கட்சி தொண்டர்களின் சந்தேக பார்வை அழகிரி மீது இருக்கும் பொது அதை ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம். தொண்டர்களை பற்றியெல்லாம் கவலை படாமல் தனது அண்ணனை மட்டும்தான் கவனத்தோடு பார்த்தார் ஸ்டாலின்.
அடுத்து வருகிற 2016 சட்டமன்ற தேர்தலை ஸ்டாலினை தலைவராக கொண்டுதான் திமுக சந்திக்க வேண்டும் என கருணாநிதி தீர்மானித்து விட்டார். உடனே தலைவராக அறிவித்து விட்டால் கருணாநிதியின் மகன் என்பதால் அவர்களாகவே எளிதில் தலைவராக அறிவித்து விட்டார்கள் என விமர்சனம் எழும் என்பதால் இது போன்ற வதந்திகளை அவர்களாகவே கிளப்பி விடுகிறார்கள். ஸ்டாலின் எளிதாக ஒன்றும் தலைவர் பதவியை பிடித்து விடவில்லை. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே, பல்வேறு போட்டிகளையும் எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்றுதான் திமுகவின் தலைவராக வந்துள்ளார் என திமுக தொண்டனை ஏமாற்றுவதற்கும் பொதுமக்களை நம்பவைக்கவும் தான் இந்த கபட நாடகத்தை மீடியமுழுவதும் தொடர்ந்து அடிக்கடி பரப்பி வருகிறார்கள்.
இது போன்ற போலியான எதிர்ப்பை காட்ட கருணாநிதியின் குடும்பத்தை தவிர்த்த வேறு எந்த தலைவரும் தயாராக இல்லை. இது போன்ற சித்து விளையாட்டுக்கு யாரும் நிச்சயம் உடன்பட மாட்டார்கள் அப்படியே யாராவது எதிர்ப்பு காட்டினால் மாநிலம் முழுவதும் உள்ள திமுகவினர் அவர்கள்மீது விபரீதம் காட்ட வாய்ப்பு உள்ளது. கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவர் எதிர்ப்பு காட்டினால் இது போன்ற வாய்ப்புக்கு இடமிருக்காது.
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் எந்த வித முட்டலும் இல்லை மோதலும் இல்லை இதை நன்றாக தெரிந்த மூத்த பத்திரிக்கை யாளர்கள் கூட மக்களை முட்டாளாக்கும் கருணாநிதியின் முயற்சிக்கு துணை போவதுதான் வேதனையான விஷயம். இது போன்ற செய்திகளை அலட்சிய படுத்திவிட்டு இன உணர்வாளர்கள் மொழிப்பற்றாளர்கள்,கலாசாரம் பண்பாடு காப்பவர்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மீடியாக்கள் முன்வரவேண்டும்.
மேலும் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி,தயாநிதி என கோஷ்டி இருப்பதாக வரும் செய்திகளும் நாடகமே. முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான செய்தியே ஆகும்.
ஒரு பதவிக்கு அழகிரியின் ஆதரவாளரும் ஸ்டாலின் ஆதரவாளரும் போட்டி போடுவதாக வைத்து கொள்வோம் எதிர்த்து போட்டியிடுபவர் ஸ்டாலினின் ஆதரவாளர் அவரது ஆதரவு கடிதமும் கையில் வைத்துள்ளார் எனவே நான் போட்டியிடவில்லை என அழகிரியிடம் முறையிடுவதாக வைத்து கொள்வோம் அப்போது அழகிரி ஸ்டாலினை எதிர்த்து தனக்கே அந்த பதவியை வாங்கி கொடுத்தால் அந்த தொண்டர் என்ன நினைப்பார் தனக்காக தனது தம்பி ஸ்டாலினையே எதிர்க்கிராரே என என்றைக்கும் அழகிரிக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருப்பார். இப்படித்தான் ஒவ்வொரு திமுக தொண்டனையும் ஏமாற்றி வருகிறார்கள்.
அழகிரி தனது ஆதரவாளர்களுக்காக ஸ்டாலினை எதிர்ப்பது போலவும், ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுக்காக கனிமொழியை எதிர்ப்பது போலவும், கனிமொழி தனது ஆதரவாளர்களுக்காக தயாநிதியை எதிர்ப்பது போலவும், தயாநிதி தனது ஆதரவாளர்களுக்காக அழகிரியை எதிர்ப்பது போலவும் ஒரு பொய்யான நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். BY . கே பாண்டி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.