dmk MP pray to hold ayappan pooja | தி.மு.க., - எம்.பி., தலைமையில் அய்யப்பன் திருவிளக்கு பூஜை| Dinamalar

தி.மு.க., - எம்.பி., தலைமையில் அய்யப்பன் திருவிளக்கு பூஜை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 தி.மு.க., - எம்.பி., தலைமையில் அய்யப்பன் திருவிளக்கு பூஜை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில், தி.மு.க., - எம்,பி., ஆதிசங்கர் ஏற்பாட்டில், இரண்டு நாட்கள் நடந்த அய்யப்பன் திருவிளக்கு பூஜை, விமர்சையாக நிறைவடைந்தது."நாத்திகம் பேசும் தலைமை, கொள்கை கோட்பாட்டை நழுவாமல் கடைபிடிக்கும் கட்சி; இது தான், தி.மு.க., இதில் ஆன்மிகத்திற்கு இடம் இல்லை' என்பது கட்சி தலைவரின் கோட்பாடு.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில், பெரும்பான்மையான, தி.மு.க.,வினர் கலந்து கொண்ட, இரண்டு நாள் அய்யப்பன் திருவிளக்கு பூஜை, கோலாகலமாக நடந்தேறியது.கடந்த, 7ம் தேதி, 1,000 பெண்கள் பங்கேற்ற, திருவிளக்கு பூஜை ஊர்வலத்திற்கு, எம்.பி., ஆதிசங்கரின் மனைவி, அஞ்சுகம், தலைமை தாங்கினார். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலில் நடந்த, சிறப்பு பூஜையில், எம்.பி., ஆதிசங்கர் மற்றும் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், திரளாக கலந்து கொண்டனர்.கேரளாவில் இருந்து வந்திருந்த நம்பூதிரிகள் பங்கேற்ற, இரண்டாவது நாள் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு துவங்கியது. சிறப்பு பூஜைகள், கத்தி, சிலம்பத்துடன் ஆட்டம், பாட்டுக் கச்சேரி என, விழா களைகட்டியது. பல லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்ட இந்த விழா, தன் ஆயுள் நீட்டிப்புக்காகவும்,லோக்சபாதேர்தலில் சீட் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், ஆதிசங்கர் எம்.பி., நடத்தியதாக, அக்கட்சியினர் கூறினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (71)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sitaramenv - Hyderabad,இந்தியா
12-ஜன-201317:25:11 IST Report Abuse
sitaramenv இந்த திராவிட கும்பல் ...ஈ.வெ.ரா. சி.என்.அன்னாத்த்ரை, ஆகியோரின் ஊசிப்போன கடவுள் மறுப்பு தத்துவங்களையும் .....பிராமண எதிர்ப்பு கொள்கையையும் வைத்து.....பல்லாண்டுகளாக தமிழகத்தை ஏமாற்றி அசிங்கப்படுத்தி விட்டதை அனைத்து தமிழ் மக்களும் முற்றிலும் உணர்ந்து விட்டார்கள். இந்த மஞ்சள் துண்டு கும்பல் விரைவில் கடுமையான தண்டனைக்கு தயாராக இருக்க வேண்டும். நீதி மன்றம் கொடுக்க தவறினால்.....அடுத்த தேர்தலில் மரண அடி கொடுக்க தயாராக உள்ளனர் அனைத்து தமிழர்களும்.........இந்த துரோகிகளின் உண்மை ரூபத்தை அவ்வப்போது தோல் உரித்து காட்டி ஒப்பற்ற தேச சேவை செய்து வரும் தினமலர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Ramkumar Valmikanathan - Chandler,இந்தியா
12-ஜன-201308:29:14 IST Report Abuse
Ramkumar Valmikanathan ஆதி சங்கர் நெற்றியில் ரத்தம் என்றால், தயாளு அம்மாள் நெற்றியில் உள்ளது ?? ஒரு வேளை தக்காளி சட்னியோ ??
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
10-ஜன-201316:57:21 IST Report Abuse
amukkusaamy அவருக்கு பிடிக்காதவங்க வெளிய போகசொல்லன்னும்ன மட்டும்தான் "நாத்திகம்" "பிராமணீயம்" எல்லாம் வரும். அதுவும் மலையாள "நம்பூதிரி" எல்லாம் பாப்பனா என்ன? திராவிடர்கள் அல்லவோ - மரியா உடனே சப்ப கட்டு கட்ட வரவும்
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
10-ஜன-201315:35:46 IST Report Abuse
Aboobacker Siddeeq எங்கே பெரியாரின் சீடன் நான் என்று சொல்வதில் கரும்புள்ளி ஏற்பட்டு விடுமோ என்று பயந்து தான் தானை தலைவர் எப்போதும் இம்மாதிரி விசயங்களில் அடக்கி வாசிக்கிறார்...குடும்ப உறுப்பினர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது இவர் கண்டும் காணாதது போல் இருப்பார். கேட்டால் இது அவரர் சொந்த விஷயமென்பார். இதிலும் சாணக்கியத்தனம் தான்.... குடும்பத்தை வைத்து மக்களிடம் வாக்கு...தன்னை வைத்து நாத்தீகர்களின் வாக்கு... யாரையும் விட்டு வைக்க கூடாது பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
சிந்திப்பவன் - chennai,இந்தியா
10-ஜன-201314:32:06 IST Report Abuse
சிந்திப்பவன் எதாவது ஒரு எம்.பி லஞ்சம வாங்கவில்லை / நேர்மையாக நடந்து கொண்டார் / மக்களுக்கு சேவை செய்கிறாரர் என்று செய்தி வந்தால் போடுங்க ஸார். மற்றபடி இவிங்க பூஜை பண்ணினாலோ,புண்ணாக்கு தின்னாலோ எங்களுக்கு என்ன லாபம்?
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
10-ஜன-201313:45:56 IST Report Abuse
Snake Babu செய்திகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா என்ன? இப்படி செய்தி எல்லாம் போட்டுக்கிட்டு.........கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர். அதை சிலர் தவறாக பயன்படுத்தி பலரை வளரவிடாமல் செய்திருந்தார்கள். அதை மாற்றத்தான் கழகங்கள் உதயமாயின. பல்வேறு வளர்சிகளால் நிலை மாறி இருப்பதால் காட்சிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதவும் இல்லாம ஐயப்பன் எல்லோருக்கும் பொது. ஆத்திகருக்கும் சரி நாத்திகருக்கும் சரி. இத ஒரு செய்தியா போட்டு கிட்டு..... சரி அத விடுங்க, முருகன் கடவுளிடம் இருக்கும் சேவலை பற்றி தெரியுமா, ராமன் ராவணனின் சம்பத்திதை பற்றி தெரியுமா. எது தெரியோமோ இல்லையோ தங்களை கடவுளின் பிரதிநிதினு நினைசிகிறது.........
Rate this:
Share this comment
Cancel
Senthil - London,யுனைடெட் கிங்டம்
10-ஜன-201313:33:14 IST Report Abuse
Senthil உங்கள் கருத்துப்படி அதிமுகவில் நாத்திகர் இல்லையா. அவர்கள் தலைவர் நாத்திகர் அதற்காக எல்லோரும் இருக்க வேண்டும் என்பது தான் தினமலர் அசையா
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-ஜன-201313:25:53 IST Report Abuse
Matt P நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கு சென்றதற்காக தி மு க கட்சியில் இருந்து விலக்கபட்டிருகிறார் .....கோயிலுக்கு சென்றார்கள் வழிபாடு நடத்தினார்கள் என்பதற்காக இப்போதெல்லாம் தொண்டர்களை நீக்கி விட்டால் கட்சி எளிதாக காணமல் போய்விடும்
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-ஜன-201313:19:24 IST Report Abuse
Matt P கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை. ...கடவுள் நம்பிக்கை உள்ள மக்களை கவர்வதற்கு இது மாதிர்யான செயல்கள் தேவைபடுகிறது. ...கடவுள் நம்பிக்கை உண்மையாக இருப்பவர்கள் எல்லாம் ...நீதி தேவனான இறைவனுக்கு பயந்து கொலை கொள்ளை வூழல் குற்றத்துக்கு . ஆளாகமாட்டார்கள். ,,தி மு க கொடுமையின் கூடாராம். ..வள்ளுவனுக்கு சிலை எழுப்பி வள்ளுவனுக்கு கோட்டம் கண்டு குரலுக்கு உரை எழதி உண்மையாக நம்பி அதன் வழியாக வாழ்ந்தாலே ...அதுவே ஒரு இறை நம்பிக்கை தான்.....எல்லாம் வெளி வேஷம். ..அண்ணாதுரை...தான் நீறு அணியாத இந்து ...சிலுவை அணியாத கிறிஸ்தவன் லுங்கி கட்டாத இஸ்லாம் என்றார். ......நோய்வாய்பட்டு படுத்த படுக்கையில் இருந்தபோது குன்றக்குடி அடிகளார் திருநீறு கொடுத்தபோது நெற்றியில் அணிந்து கொண்டார். ..மக்கள் தொண்டே மகேஷன் தொண்டு என்று மக்களுக்காகவே வாழ்ந்தார். ..ஆதிசங்கரருக்கு பக்தி இருக்கலாம். தலைமைக்கு இருக்கும் என்று நம்ப முடியவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
10-ஜன-201313:18:25 IST Report Abuse
Vaal Payyan உங்களுக்கு ஏன் சார் இவ்ளோ குசும்பு ... ஏதோ பண்றாரு தாத்தாவ விட்டுடுங்கோ ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.