modi wants knowlege socitey in Gujarat | அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதில் குஜராத் முக்கிய பங்கு : மோடி ஆர்வம்| Dinamalar

அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதில் குஜராத் முக்கிய பங்கு : மோடி ஆர்வம்

Updated : ஜன 10, 2013 | Added : ஜன 09, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதில் குஜராத் முக்கிய பங்கு :  மோடி ஆர்வம்

""அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதில், உலக சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற, குஜராத் மிகுந்த ஆர்வத்துடன் தயாராக உள்ளது,'' என, முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்தார்.குஜராத் மாநிலத்தில், வர்த்தகம், தொழில்துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், ஆண்டுதோறும் உலகளாவிய மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடக்கும், 6வது மாநாடு, வரும், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.இதன் ஒரு அங்கமாக, கல்வி நிறுவனங்களுக்கான, சர்வதேச இரண்டு நாள் மாநாடு, காந்திநகரில் நேற்று துவங்கியது. இதைத் துவக்கி வைத்து, முதல்வர் நரேந்திரமோடி பேசியதாவது:இந்த மாநாட்டில், 56 நாடுகளில் இருந்து, 135 பல்கலைகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவில், 14 மாநிலங்களில் இருந்து, 60 பல்கலைகள் பங்கேற்றுள்ளன. 21ம் நூற்றாண்டு, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.வாரந்தோறும், புது, புது தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவது, நம் முக்கிய நோக்கமாக உள்ளது.
"அறிவு சார் சமுதாயம்'
அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்கும், அறிவு தொழில்நுட்பம் மிகவும் அவசியம். தொழில்நுட்ப வசதிகளையும், சாதனங்களையும், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை, ஒரு காலகட்டத்தில் இருந்தது; இப்போது, அப்படியில்லை.
தொழில்நுட்பத்தையும், அதன் பயன்களையும், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப மாற்றம் முழுமை அடைந்த பின், நாம் அறிவுசார் சமுதாயமாக மாறுவோம். அப்போது, தொழில்நுட்பத்தின் பயனை, ஒவ்வொரு தனிமனிதனும் பெறும் நிலை ஏற்படும்.அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதில், உலக சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற, குஜராத் மிகுந்த ஆர்வமாக உள்ளது. இதை புரிந்து கொண்டுதான், இதுபோன்ற மாநாட்டை நடத்துகிறோம்.
இந்தியா, 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, உயர்கல்வியில் சிறந்து விளங்கியது. தட்ஷ சீலம், நாலந்தா பல்கலைகள், கணிதம், கலை, மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கின.இந்தோனேஷியா, ஜப்பான், துருக்கி, பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள், இங்கு வந்து பயின்றனர். அப்போது, 9 மாடி கட்டடத்தில் நூலகம் இருந்தது; 10 ஆயிரம் மாணவர்கள், 2,000 ஆசிரியர்கள் இருந்தனர்.குஜராத் அர”, உயர்கல்வியை வலுப்படுத்தும் வகையில், இம்மாநில மாணவர்கள், இந்தியாவில் உள்ள கல்வியை பெறுவது மட்டுமில்லாமல், உலகளாவிய கல்வி திட்டங்களையும் தெரிந்து படிக்க வேண்டும். உலகளாவிய வேலை வா#ப்புகளையும் பெற வேண்டும் என்பதற்காக, இம்மாநாடு நடத்தப்படுகிறது."வேலைவாய்ப்பு தருகிறோம்'
குஜராத் மாணவர்களுக்கு, வெறும் சான்றிதழ்களை மட்டும் வழங்குவதில்லை. மாணவர்கள், அவர்கள் சார்ந்த துறைகளில் போதிய திறனைப் பெற்று, வேலைவா#ப்புகளை பெறவும் வழிவகை செ#கிறோம். ஆரா#ச்சி, தொழில்நுட்பத்திறன், தகவல் தொடர்புதிறன் மேம்பாடு ஆகியவற்றை பெறவும், இம்மாநாடு வழிவகை செ#யும். இந்த வா#ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வரும், 2020ல், 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தான், அதிகளவில் இருப்பர் என, ஒரு ஆ#வில் தெரிய வந்துள்ளது. இளைஞர் சக்தியை நல்வழிப்படுத்தி, தரமான கல்வியையும், தொழில்நுட்பத்தையும் வழங்கினால், அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.இவ்வாறு மோடி பேசினார். இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைகளுடன், குஜராத் மாநில பல்கலைகள், பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.குஜராத் மாணவர்கள், ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு சென்று படித்தல், ஆரா#ச்சி திட்டங்களில் ஈடுபடுதல், தொழில்நுட்ப திறன்களை பெறுதல் ஆகியவற்றுக்கு, இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.தமிழகத்தில் இருந்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் வி.ஐ.டி., பல்கலையும், மாநாட்டில் பங்கேற்றுள்ளன. மேலும், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை, வித்யாபாரதி ஆகிய கல்வி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - pudukkottai,இந்தியா
10-ஜன-201310:37:30 IST Report Abuse
krishnan ய் ய விட்டு விட்டீர்கள் எடிட்டர் சார் , கிரிக்கெட் செய்திகள் பதிலாக டென்னிஸ் செய்திகள் வருகிறது சார் - கிருஷ்ணன் புதுக்கோட்டை
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
10-ஜன-201308:14:55 IST Report Abuse
Guru பாராட்டுக்கள் மோடி சார்
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
10-ஜன-201305:30:16 IST Report Abuse
s.maria alphonse pandian மோடிஜி அவர்களே, உங்கள் நிர்வாக திறமைக்கு எப்போதும் என் பாராட்டுக்கள்.. ஆனால் ஐ.டி (I.T) விஷயத்தில் குஜராத் மிக மிக பின் தங்கியுள்ளது என்பதையும் அதன் பின் தங்கிய நிலைமைக்கு தங்களின் ஆங்கில எதிர்ப்பு காரணமாக இருக்குமோ என எண்ணுகிறேன்...
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
10-ஜன-201305:27:02 IST Report Abuse
s.maria alphonse pandian "குஜராத் மாநிலத்தில், வர்த்தகம், தொழில்துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், ஆண்டுதோறும் உலகளாவிய மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடக்கும், 6வது மாநாடு"......அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்தில் மட்டுமே அனுமதிக்க மாட்டோம்..அந்நிய சக்திகள் நமது தாய் திரு பாரத நாட்டில் காலூன்ற விடமாட்டோம்..., மற்ற துறைகளில் அந்நிய முதலீட்டாளர்களை கால் கழுவி விட்டு வரவேற்போம்....எப்படி எங்கள் "தாய் நாட்டு பற்று" கொள்கை?
Rate this:
Share this comment
Cancel
suresh kanyakumari - Nagercoil,இந்தியா
10-ஜன-201302:17:59 IST Report Abuse
suresh kanyakumari Modi, is an intelligent person. Planning and leadership quality is good.
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
10-ஜன-201301:41:45 IST Report Abuse
விருமாண்டி மோடி பிரதமராக வந்து பாகிஸ்தான் கொட்டத்தை அடக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
10-ஜன-201300:54:09 IST Report Abuse
Thangairaja அறிவுசார் சமுதாயம் என்றால் அங்கு சாதியோ மதமோ நுழைய கூடாது. மதத்தின் பெயரால் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள அமீத்ஷா போன்றவர்களை எம் எல் ஏ ஆக்கி விட்டு அறிவை பற்றி இவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
10-ஜன-201300:27:29 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே என்னது அறிவு சார் சமுதாயமா? இருங்க நானு சிருபான்மையிணன், எனக்கு கோட்டா வேணும், நானு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனக்கும் கோட்டா வேணும், நான் யானை கட்சியை சேர்ந்தவன் எனக்கு? ஐயோ இந்த ஊரு எனக்கே சொந்தம், அப்போ இங்க இருக்குற அறிவெல்லாம் "தள்ளி தெலுங்கானா மாதிரி" வேணும். .............கனவே கலையாதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை