Rs 300 core loss in kovai industrial area | ஸ்டிரைக் வெற்றி :கோவையில் ரூ.300 கோடிக்கு உற்பத்தி இழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டிரைக் வெற்றி :கோவையில் ரூ.300 கோடிக்கு உற்பத்தி இழப்பு

Updated : ஜன 10, 2013 | Added : ஜன 09, 2013 | கருத்துகள் (11)
Advertisement
ஸ்டிரைக் வெற்றி :கோவையில் ரூ.300 கோடிக்கு உற்பத்தி இழப்பு

கோவை: மாநிலம் முழுவதும் மின்சாரத்தை சமமாக பங்கிட வலியுறுத்தி, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொழில் முனைவோர் அழைப்புவிடுத்திருந்த ஒருநாள் ஸ்டிரைக், கோவையில் வெற்றி பெற்றது. இதனால், சுமார் 300 முதல் 500 கோடி ரூபாய் வரை, உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.மின்சார பற்றாக்குறையால், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தினமும் 16 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால், தொழில் துறையினர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்க கோரி, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்திய தொழில் துறையினர், நேற்று ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.இதற்கு ஆதரவு தெரிவித்து இன்ஜினியரிங் உதிரி பாகம், மோட்டார், பம்புசெட், மின்சாதன விற்பனை கடைகள், கோவையில் மூடப்பட்டிருந்தன. இதனால், சுமார் 300 முதல் 500 கோடி ரூபாய் வரை, உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.காட்மா, கொடிசியா, சீமா, சிஸ்பா, டாக்ட், காப்மா, கொசீமா, கவுமா, சீயா உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய மின் நுகர்வோர் ஒருங்கிணைப்புக்குழுவினர், நேற்று காலை கலெக்டர் கருணாகரன் மற்றும் டாடாபாத்தில் உள்ள மின் வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு ஆகியோரிடம் மனு அளித்தனர்.ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாலசுந்தரம் கூறியதாவது:
தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 8-10 சதவீதம் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. புது தொழில் திட்டங்கள் ஏதாவது வந்தால், தேவை இன்னும் அதிகரிக்கும். "இந்த ஆட்சியில் மின் தட்டுப்பாடு மட்டுமே ஒரே பிரச்னை' என்கிறார் முதல்வர்.
அதாவது, இப்பிரச்னையை தேர்தல் கண்ணோட்டத்தில் மட்டுமே அரசு பார்க்கிறது. தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில், தேர்தலில் நிச்சயம் பாதிப்பு இருக்கும். ஸ்டிரைக்கில் கோவையில் 90 சதவீத நிறுவனங்களும், ஒசூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 70 சதவீத நிறுவனங்களும் மூடப்பட்டன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஒருங்கிணைப்புக்குழுவினருடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவை, திருப்பூர் மாவட்ட சிறு, குறுந்தொழில் முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ""மின்சாரத்தை பகிர்ந்து வழங்கினால், அனைத்து மாவட்டங்களுக்கும் தினமும் பகலில் குறைந்தது எட்டு மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். இதன் மூலம் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணலாம். ஆனால் இக்கோரிக்கையை செயல்படுத்த, அரசு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை. மின்வெட்டு பிரச்னைக்கு "2013 டிசம்பரில் தீர்வு கிடைத்து விடும்' என்கிறார் முதல்வர். அதாவது, ஓராண்டு இப்பிரச்னையை சந்தித்தாக வேண்டும் என, மறைமுகமாக கூறுகிறார். ஆண்டு இறுதி வரை காத்திருக்க தயார். அதுவரை இருக்கும் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க வேண்டும்,'' என்றார்.

சென்னைக்கு பிரியாணி கோவைக்கு கஞ்சியா?

"காட்மா' சங்கத் தலைவர் ரவிக்குமார் கூறும்போது, ""2013 டிசம்பரில் மின்தட்டுப்பாடு பிரச்னை தீர்வதற்குள், பல நிறுவனங்கள் மூடப்பட்டு விடும். கோவையின் ஆர்டர்கள் சென்னை, வெளி மாநிலங்களுக்கு கைமாறி விடும். அரசு தாய் போன்றவள். அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக உணவு வழங்க வேண்டும். ஆனால் சென்னை குழந்தைக்கு மட்டும் பிரியாணியும், கோவை குழந்தைக்கு கஞ்சியும் வழங்கப்படுகிறது. பஞ்சம் தீரும் வரை எல்லா குழந்தைகளுக்கும் ரசம் சாதம் வழங்க தாய் முன்வர வேண்டும்,'' என, வேதனையுடன் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shenbaga Rajan - Sivakasi,இந்தியா
11-ஜன-201306:39:48 IST Report Abuse
Shenbaga Rajan சென்னையில் குளிர்படுத்தும் தொழில் இருக்கிறது என்று ஒரு நண்பர் கூறுகிறார். எல்லா ஊர்களிலும் முக்கியமான தொழில்கள் உள்ளன. தமிழகம் முழுதும் சமசீர் மின் விநியோகம் செய்தால், 6 மணி நேரத்திற்கு மேல் தடை இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Shenbaga Rajan - Sivakasi,இந்தியா
11-ஜன-201306:36:26 IST Report Abuse
Shenbaga Rajan தமிழர்களே, கோவை நமக்கு வழி காட்டுகிறது. தமிழகம் முழுவதும் ஒன்று பட்டால் இந்த போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதில் எந்த கட்சிகளையும் நம்பி பயன் இல்லை. நமக்கு நாமே என்று தெருவில் இறங்கி போராடினால் ஒழிய நமது உரிமை இந்த மாதிரி சூறையாடப் பட்டுக் கொண்டே இருக்கும். அடுத்த கட்ட போராட்டத்தை கோவை அறிவிக்கும் போது நாம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
10-ஜன-201308:25:04 IST Report Abuse
Raj 300 கோடி இழப்பு யாருக்கு வெற்றி?
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
10-ஜன-201308:23:22 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் operation success, patient dead........
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
10-ஜன-201307:03:27 IST Report Abuse
JALRA JAYRAMAN வீடுகளுக்கு பகல் முழுவதும் மின்சாரத்தை கட் செய்யல்லாம், அதை தொழில் நிறுவனகளுக்கு கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
10-ஜன-201305:45:08 IST Report Abuse
s.maria alphonse pandian இந்த போராட்டத்தை நடத்த சொன்னதே அரசாங்கமாக இருக்குமோ ? சென்னைவாசிகளின் மேல் மேலும் ORIRU மணி நேர மின்வெட்டுக்கு கை வைக்க திட்டமோ ?
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
10-ஜன-201304:05:35 IST Report Abuse
Baskaran Kasimani மின்சார பிரச்சினை தொடர்வதால் பெரும்பாலான நிறுவனங்கள் நொடித்துப்போகும் நிலை உருவாகியுள்ளது. எங்கும் கமிசன் என்கிற நிலையில் தொழில் தொடங்க முனைவர்கள் வருவது அரிது - அதையும் இந்த அரசு முடக்குவது நாட்டின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடுவது போன்றது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-201302:54:49 IST Report Abuse
தமிழ்வேல் சென்னையில் மின்வெட்டை 3 மணி நேரமாக ஆக்கலாம்...இதனால் தொழில்கள் பாதிக்காது என்றால் 3 மணி நேரம் சேர்ந்தாற்போல செய்யாமல் காலை மதியம் மாலை என ஒருமணிநேரம் மின் வெட்டு சென்னையிலும் செய்யலாம்...3 மணி நேரம் சேர்ந்தாற்போல செய்வது சரியல்ல... சென்னை பகுதியில் அதிகமாக குளிர் பதன பெட்டிகள் உள்ளன. அவை 1 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டை தாங்காது. உணவில் இயற்கையாகவே குறைந்த அளவில் உள்ள கிருமிகள் (சல்மொனலோஸ் போன்றவை ) வளர்ந்து பெருகி விட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்...அதனால் தொடர்ந்து மின்வெட்டை செய்வது நல்லதல்ல...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-201302:48:44 IST Report Abuse
தமிழ்வேல் நீங்கன்னா பாருங்க மின்வெட்டுக்கு மத்திய அரசுதான் காரணம்னு சொல்ற கட்சி காரவுங்க எல்லாரும் மத்திய அரச எதிர்த்து திராணியோட ஸ்டிரைக் செய்வாங்க ......
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-201302:46:14 IST Report Abuse
தமிழ்வேல் சொம்புகலெல்லாம் மின்வெட்டுக்கு திமுக வும் மத்திய அரசும்தான் காரணம்னு சொல்லுதுங்க.... நீங்க ஏன் அவுங்க சொல்றத கேட்காம அம்மாவை ரெஸ்ட் எடுக்க உடாம தொந்தரவு பண்றீங்க ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை