சென்னை: "பாலிவுட்' நடிகர் அமிதாப்பச்சனை அறிமுகப்படுத்திய, பழம்பெரும் சினிமா இயக்குனர் ராமனாதன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். "பாம்பே டூ கோவா' என்ற இந்தி சினிமா மூலம், அமிதாப்பச்சனை அறிமுகம் செய்து வைத்தவர், இயக்குனர் ராமநாதன், 83. "மஹான், கிராப்தார்' உட்பட, பல்வேறு திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
"கிராப்தார்' சினிமாவில், ரஜினியும், கமலும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும், பல சினிமாக்களை இவர் இயக்கியுள்ளார். தி.நகரில் வசித்து வந்த இவர், சமீப காலமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று திடீரென மாரடைப்பால் இறந்தார். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், சைலஜா, உமா என்ற மகள்களும், சிபிஸ் என்ற மகனும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு, நாளை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.