மும்பை: ""பாலியல் பலாத்காரம் நகரங்களில்தான் அதிகம் நடக்கிறது; பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதும், பாலியல் பலாத்காரம் அதிகம் நடப்பதற்கு காரணம்,'' என, சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி கூறினார். டில்லி கற்பழிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாலியல் பலாத்காரங்கள் அதிகரிப்பது குறித்து, சில தலைவர்கள் பிரச்னையை கிளப்பும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அசாராம் பாபு மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரும், மகாராஷ்டிரா சட்டசபை எம்.எல்.ஏ.,வுமான அபு ஆஸ்மி நேற்று கூறியதாவது:
பாலியல் பலாத்காரங்கள் கிராமங்களை காட்டிலும், நகரங்களில் தான் அதிகம் நடக்கிறது. டில்லியில் நிகழ்ந்த கொடுமைக்கு, மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமே காரணம். இந்த விஷயத்தில், ஆர்.எஸ். எஸ்., தலைவர் மோகன் பகவத் கருத்துடன் உடன்படுகிறேன். உறவினர் அல்லாத ஆணுடன் இரவில் பெண் ஒருவர் வெளியே செல்வதற்கு என்ன அவசியம் வந்துள்ளது. உறவினர் அல்லாத ஆண்களுடன் பெண்கள் வெளியில் செல்வதை தடுக்க வேண்டும். கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு, பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதும் காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.